/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-15T105622.577.jpg)
Ajith’s Valimai movie release updates: நடிகர் அஜித் நடிப்பில் நாளை வெளியாக உள்ள ‘வலிமை’ திரைப்படம், ரீலிஸ் ஆவதற்கு முன்பே கோடிகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷ்ங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலிவுட் நடிகை ஹூமா குரேசி அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் டோலிவுட் நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார்.
வலிமை திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அனைத்து திரையரங்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. அஜித் படம் வெளியாகிறது என்றாலே, அவரது ரசிகர்களுக்கு திருவிழா தான். அதுவும் அஜித்தின் ஒரு படம் வெகு நாட்களுக்கு பிறகு வெளியாகிறது. படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் முதலே, படம் குறித்த அப்டேட்டுகளுக்காக அஜித் ரசிகர்கள் ஏங்க ஆரம்பித்து விட்டனர்.
இதையும் படியுங்கள்: நடிகர் ரஜினியின் 170 பட இயக்குநர்.. நடிகை சமந்தாவின் புதிய பட அறிவிப்பு.. மேலும் செய்திகள்
பின்னர், படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியான பிறகு தான் வலிமை அப்டேட் குறித்த ரசிகர்களின் தாகம் அடங்கியது. சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியுள்ள டிரைலரில் அஜித்தின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்க தொடங்கினர்.
Back 2 Back Houseful FDFS show for #Valimai 💥 in your #RamCinemas ✨
— Ram Muthuram Cinemas (@RamCinemas) February 21, 2022
Day 1 Gonna Be Completely houseful 3 days before the movie release !!#ValimaiInRamCinemas 🔥 Purely Raged !! pic.twitter.com/p4eEx3hBuw
#Thala Ajith Massive Cutout
— VEERAM VINOTH (@Vinoth31038628) February 21, 2022
Working going on @rakkicinemas TRL@thala_addicts#Valimai Rage on feb24 pic.twitter.com/nDuSLY9LNq
இந்தநிலையில், படம் பிப்ரவரி 24 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து அஜித் ரசிகர்கள் பரப்பரப்பாகினர். நேற்று முதல் படத்திற்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், நேற்றே அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல்லாக ஆனது. அடுத்த மூன்று நாட்களுக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக உள்ளன. ஏற்கனவே வலிமை படத்தின் தெலுங்கு பதிப்பின் உரிமை கடந்த மாதம் 4.5 கோடிக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், படம் வெளியாவதற்கு முன்பே வலிமை திரைப்படம் கோடிகளில் வசூலைக் குவிக்க ஆரம்பித்துள்ளது.
Our banner landed in @JeyaAnand_cine 🔥 Feb 24 grand celebration awaiting 💯🔥 #ValimaiFDFS#Valimaipic.twitter.com/8b8ZDP0OS1
— 𝓚𝓾𝓶𝓪𝓻 𝓑𝓲𝓵𝓵𝓪𓃵 (@kumarbilla07) February 21, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.