கொரொனா தாக்கம் : வலிமை படக்குழுவின் அடுத்த பிளான்

Valimai Shooting: சென்னையில் மட்டும் சுமார் 30 நாட்கள் படபிடிப்பு நடந்திருக்கிறது.

Valimai Shooting: சென்னையில் மட்டும் சுமார் 30 நாட்கள் படபிடிப்பு நடந்திருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ajith, valimai

Ajith, valimai

கொரோனா வைரஸ் தாக்கத்தால், பல படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நடிகர் அஜித் நடிக்கும் ‘வலிமை’ படக்குழு, அடுத்த இரண்டு மாதங்களில் ஸ்பெயினுக்கு செல்லவிருக்கிறதாம். அங்கு ஓர் முக்கியமான சண்டைக்காட்சி படமாக்கப்படவிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

கொரோனா வைரஸ் LIVE – தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு – முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை

யுவன் சங்கர் ராஜாவின் இசையைமைக்கும் ‘வலிமை’ படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஹுமா குரேஷி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க, ஆர்எக்ஸ் 100 புகழ் கார்த்திகேயா வில்லனாக மிரட்டுகிறாராம்.

இயக்குனர் ஹெச்.வினோத் தனது ஆக்‌ஷன் த்ரில்லரான ‘வலிமை’யை டிசம்பரில் படமாக்கத் தொடங்கினார். ஹைதராபாத் மற்றும் சென்னையில் படபிடிப்பும் முடிந்து விட்டது. சென்னையில் மட்டும் சுமார் 30 நாட்கள் படபிடிப்பு நடந்திருக்கிறது. நிலப்பரப்புகளை நேசிக்கும் வினோத், தனது தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் சில காட்சிகளை ராஜஸ்தானில் படமாக்கினார். படமும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று மாபெரும் வெற்றியடைந்தது. அதேபோல், வலிமை படத்திலும் ஒரு முக்கியமான அதிரடி மற்றும் சேஸிங் காட்சிக்காக ஸ்பெயின் மற்றும் மொராக்கோ செல்ல திட்டமிட்டிருக்கிறாராம். ஆகையால் ஏப்ரல்-மே மாதங்களில் குழு அங்கு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment
Advertisements

இன்றைய செய்திகள் Live : நீலகிரிக்கு கோழிகளை ஏற்றி வர தடை – மாவட்ட ஆட்சியர் அதிரடி

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

 

Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: