இந்து மதத்தை அவமதித்தாரா விஜய் சேதுபதி? இந்து மகா சபா புகார்!
நடிகர் நடிகைகள் கலந்து கொண்ட பழைய நிகழ்வுகளில் மதம் தொடர்பாக ஏதாவது பேசிவருகிறார்களா என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது டிஜிட்டல் தாக்குதல் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.
நடிகர் நடிகைகள் கலந்து கொண்ட பழைய நிகழ்வுகளில் மதம் தொடர்பாக ஏதாவது பேசிவருகிறார்களா என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது டிஜிட்டல் தாக்குதல் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.
All India Hindu Mahasabha files complaint against Actor Vijay Sethupathi
All India Hindu Mahasabha files complaint against Actor Vijay Sethupathi : மத ரீதியிலான கருத்துகள் தொடர்பாக தமிழ் திரையுலகினர் தொடர்ந்து சர்ச்சையில் மாட்டி வருகின்றனர். ஏற்கனவே ”ஜோதிகா பெருவுடையார் கோவிலுக்கு நிதி உதவி அளிப்பது போல் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் நிதி உதவி அளியுங்கள்” என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு வகையில் தாக்குதலுக்கு ஆளானார் ஜோதிகா. ஆனால் அவருடைய கூற்றில் உறுதியாக இருப்பதாக நடிகர் மற்றும் ஜோதிகாவின் கணவர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் திரையுலகினர் பலரும் ஜோதிகாவுக்கு ஆதரவை அளித்தனர். அதில் விஜய் சேதுபதியும் முக்கியமானவர்.
தற்போது விஜய் சேதுபதி மீது மற்றொரு புகார் எழுந்துள்ளது. இந்து ஆகமவிதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது இந்து மகா சபாவினர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் “தற்போது சமூக வலைதளங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 17.3.2019 அன்று ஒளிபரப்பப்பட்ட நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, இந்து கோயில்களில் தெய்வங்களுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் விதமாக தெய்வங்கள் குளிப்பதை எல்லோருக்கும் காட்டத் தெரிந்தவர்களுக்கு ஏன் தெய்வங்களுக்கு உடைமாற்றும் நிகழ்வை காட்டக் கூடாது என்று ஒரு சிறுமி தனது தாத்தாவிடம் கேட்டதைப் போல கற்பனையாக சொல்லுவது இந்து மதத்தினையும், அதன் வழிபாட்டு முறைகளையும் மற்றும் இந்து கோயில்களில் நடக்கும் ஆகம விதி நடைமுறைகளையும் கேவலப்படுத்தி இந்துக்களின் மனதையும், நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளார்.
Advertisment
Advertisements
அந்நிகழ்ச்சியின் நோக்கமே குறைந்த தண்ணீரில் குளிப்பது எப்படி என்று காட்டுவதற்கான நிகழ்ச்சியாக அமையப் பெற்றுள்ளது. அதில் இந்து மதக் கோயில்க்ளின் அபிஷேக, அலங்கார முறைகளைப் பற்றிக் கூற காரணம் என்ன? இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதம் தான் கிடைத்ததா, ஆகையால் விஜய் சேதுபதி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்துக்களின் உணர்வை மதித்து விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய மகா சபை கேட்டுக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சமீப காலமாக, நடிகர் நடிகைகள் கலந்து கொண்ட பழைய நிகழ்ச்சிகளில் மதம் தொடர்பாக ஏதாவது பேசிவருகிறார்களா என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது டிஜிட்டல் தாக்குதல் நடைபெறுவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்து மகா சபா குறிப்பிட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“