ஜோதிகா சுட்டிக் காட்டிய ”அந்த” மருத்துவமனையில் பிடிபட்ட நச்சு பாம்புகள்!

ஜோதிகாவை பலரும் குறை கூறினார்கள் ஆனால் அவர் மேற்கொள் காட்டிய மருத்துவமனயின் தற்போதைய நிலை குறித்து யாரும் அக்கறை காட்டவில்லை.

By: April 30, 2020, 4:43:50 PM

Jyothika controversial speech venom snakes caught in government hospital : கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளார் நடிகை ஜோதிகா. ”உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் பற்றி நிறைய கேள்விப்பட்டதுண்டு. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற படபிடிப்பின் போது நாங்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். அங்கே நாங்கள் பார்த்த காட்சிகள் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு இருந்தது” என விருது வாங்கும் விழா ஒன்றில் பேசியிருந்தார் நடிகை ஜோதிகா.

மேலும் படிக்க : ரூ.10 லட்சம் மனையை கல்விப் பணிக்கு தானம் கொடுத்த இறைப் பற்றாளர்: ஜோதிகா கருத்துக்கு வலு சேர்த்த நீதிபதி சந்துரு

”எனவே கோவிலுக்கு செல்ல மனம் இல்லாமல் அப்படியே திரும்பிவிட்டோம்.கோவிலுக்கு செய்யும் செலவினை பள்ளிகள் மற்றும் மருத்துவமனைக்கு செலவிடுங்கள்” என ஜோதிகா கூறியிருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தஞ்சை பெரிய கோவிலை அவமதித்துவிட்டதாக பலரும் தங்களின் ஆட்சேபணையை தெரிவித்தனர். ஆனால் யாரும் ஜோதிகா மேற்கோள் காட்டிய மருத்துவமனை மீது அக்கறை கொள்ளவில்லை.  ஜோவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தஞ்சாவூர் இராசமிராசுதார் மருத்துவமனையில் அதிகாரிகள் தற்போது ஆய்வு பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது மருத்துவமனை வளாகம் முழுவதும் புதர் மண்டி கிடந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

மேலும் படிக்க : ஜோதிகா பேசிய கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்: சூரியா அறிக்கை

அதனை அகற்றும் பணியில் ஜே.சி.பி. வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. 10க்கும் மேற்ப்பட்ட நச்சு பாம்புகள் அங்கே தற்போது  பிடிப்பட்டது. மருத்துவமனையில் பணியாற்றும் ஒருவருக்கு இன்று பாம்புக்கடியும் ஏற்பட்டுள்ளது.  ராசமிராசுதாரர் மருத்துவமனயில் கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானோர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனயின் தற்போதைய இந்த சூழல் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி இருக்கிறது.

ஜோதிகாவின் இந்த துணிச்சலான பேச்சுக்கு துணையாகவும், உறுதியாகவும் இருப்பதாக அவருடைய கணவரும் நடிகருமான சூரியா அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் எங்களுக்கு உறுதுணையாய் இருந்த மக்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Jyothika controversial speech venom snakes caught in government hospital what she mentioned

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X