என் கண்களை திறந்தவர் அவர் தான்! - காதலன் குறித்து அமலா பால் உருக்கம்!

Amala Paul's New Partner: பாதுகாப்பற்ற சூழலில் நடிகர்கள் உள்ளதால் தன்னைப் பாராட்டும் நபர்களையே அவர்கள் அருகில் வைத்திருப்பார்கள்.

Amala Paul: நடிகை அமலா பால் தற்போது ஆடை படத்தின் புரமோஷனில் பிஸியாக உள்ளார். இந்தப் படத்தை ’மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்க்காணலில் கலந்துக் கொண்ட அமலா, தனது காதல் மற்றும் காதலனைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். “ஆடை படத்தின் கதையைக் கேட்டபோது அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அவர் என்னிடம் முதலில் சொன்னது, நீ முதலில் இதற்கு உன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நீ 100 சதவீதம் தயாராக வேண்டும் என்றார்.

நான் தற்போது மாறியதற்கும், என் வேலை குறித்த பார்வைக்கும் அவரே காரணம். தாயால் மட்டும் நிபந்தனையற்ற அன்போடு சேர்த்து, எல்லாவற்றையும் தியாகம் செய்ய முடியும் என எண்ணியிருந்தேன். ஆனால் தன்னாலும் அவற்றைச் செய்யமுடியும் என எனக்கு அவர் நிரூபித்துள்ளார்.

’ஏ.எல்.விஜய் இனிமையானவர்’ – அமலா பால்!

தன்னுடைய வேலையை எனக்காக தியாகம் செய்திருக்கிறார். சினிமா மீதான என்னுடைய ஆர்வத்தை அவர் அறிவார். அதற்காக என்னை எப்போதும் பாராட்டிக் கொண்டிருக்கமாட்டார். என் முந்தைய படங்களைப் பார்த்துவிட்டு, நான் ஒரு மோசமான நடிகை என்று குறிப்பிட்டார்.

என்னுடைய மூன்றாம் கண்ணை திறந்தவர் அவர்தான். பாதுகாப்பற்ற சூழலில் நடிகர்கள் உள்ளதால் தன்னைப் பாராட்டும் நபர்களையே அவர்கள் அருகில் வைத்திருப்பார்கள். நானும் அப்படித்தான். என்னைச் சுற்றி உள்ளவர்கள் உண்மை நிலையைச் சொல்வதில்லை. அவர் என் வாழ்வில் வந்து, என் குறைகளைக் களைந்தெடுத்தார். என் வாழ்வின் உண்மை அவர்தான்” என உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் அமலா.

ஆனால் யாரந்த நபர் என்பதை மட்டும் இறுதி வரை சொல்லவே இல்லை!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close