/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-01T104613.510.jpg)
America Galaxy theatre shares Vijay’s Beast movie story: பீஸ்ட் திரைப்படத்தின் கதையை அமெரிக்காவைச் சேர்ந்த கேலக்ஸி திரையரங்கம் பகிர்ந்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பீஸ்ட் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தநிலையில் ஏப்ரல் 2 ஆம் தேதி பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் கதையை அமெரிக்காவைச் சேர்ந்த கேலக்ஸி திரையரங்கம் பகிர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்: விஜய் டெலி அவார்ட்ஸ்; பெஸ்ட் சீரியல், பெஸ்ட் ஜோடி இதுதான்; விருது விவரம் இதோ…
அதில், நகரின் பரபரப்பான பகுதியில் உள்ள கட்டிடத்தை தீவிரவாதிகள் கைப்பற்றுகின்றனர். அவர்கள் தீவிரவாதிகளின் தலைவனை விடுவிக்க கோரி இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். இந்திய அரசு ஒரு தலைவர் தலைமையில் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைக்கிறது. அந்த குழுவின் தலைவர் இந்திய உளவுத்துறையில் வேலைபார்த்த தனது சகா ஒருவர் உள்ளே இருப்பது தெரிய வருகிறது. தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட பொதுமக்களை காப்பாற்ற அவரின் உதவியை நாடுகிறார். அந்த முன்னாள் ரா ஏஜெண்ட் தீவிரவாதிகளுக்கு எதிராக தனது மிஷனை ஆரம்பிக்கிறார். தீவிரவாதிகளுக்கு சாதகமாக நிலைமை இருப்பதால் தீவிரவாதிகளின் தலைவனை அரசு விடுவிக்கிறது. ஆனால் ரா ஏஜெண்ட் துரிதமாக செயல்பட்டு, பொதுமக்களை மீட்டு தீவிரவாதிகளை கொல்கிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.