Vijay Tele Awards 2022 winners list here: தமிழின் முக்கிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி, பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது போல், சீரியல்களுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
விஜய் டிவி ஒவ்வொரு ஆண்டு விஜய் டெலி அவார்டுகளை வழங்கி, சீரியல் நடிகர், நடிகைகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் தொகுப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டமாக, விஜய் டிவி கடந்த சில வாரங்களாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி வந்தது.
தற்போது விஜய் டெலி அவார்ட்ஸ் விருது பெற்றவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் சிறந்த சீரியலுக்கான போட்டி கடுமையானதாக இருந்த நிலையில், எந்த சீரியலுக்கு கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தநிலையில், பாக்கியலட்சுமி சீரியல் சிறந்த சீரியலுக்கான விருதைத் தட்டிச் சென்றது.
சிறந்த ஹீரோ மற்றும் ஹீரோயின் விருதை தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்து வரும் வினோத் பாபு மற்றும் பவித்ரா பெற்றுள்ளனர்.
மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் நாயகியாக நடித்து வரும் சுசித்ரா, சிறந்த அம்மா நடிகை விருதை பெற்றுள்ளார். சிறந்த அப்பா நடிகராக ஜெபமாலை தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த வில்லனாக பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த துணை நடிகையாக பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ரேஷ்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/Vijay-tele-award-suchitra.jpg)
சிறந்த குடும்பம் விருது, கூட்டு குடும்ப வாழ்க்கையை விவரிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: அடுத்த லெவலுக்கு சென்ற சிவாங்கி… பிரபல பாடகருடன் இசைக்கச்சேரியில் பங்கேற்பு
சிறந்த On Screen Pair (ஜோடி)விருது, தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கலக்கி வரும் தீபக் மற்றும் நட்சத்திராவுக்கு கிடைத்துள்ளது.
சிறந்த நகைச்சுவை நடிகராக பாலாவும், நடிகையாக VJ அர்ச்சனாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த மகனாக ராஜாராணி 2 சித்துவும், சிறந்த மருமகளாக மௌனராகம் ரவீனாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த தொகுப்பாளர் விருது ரக்சன் மற்றும் பிரியங்காவுக்கு கிடைத்துள்ளது.
Finding of the Year விருது, ராஜு ஜெயமோகன் (பிக் பாஸ் தமிழ் சீசன் 5) மற்றும் வினுஷா (பாரதி கண்ணம்மா) ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
பிரபலமான ஜோடியாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோருக்கு குக் வித் கோமாளிக்காக கிடைத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil