Amitabh Bachchan : பாலிவுட்டின் உச்ச நடிகர், அமிதாப் பச்சன் கொரொனா வைரஸ் குறித்த தனது கருத்துக்களை கவிதை வரிகளில் பகிர்ந்து கொள்ளும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். வீடியோவின் தொடக்கத்தில், கொரொனா வைரஸின் தாக்கமும், உலகம் முழுவதும் மக்கள் இதனால் கொண்டுள்ள அச்சத்தையும் பற்றி பேசியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்
பின்னர் தான் எழுதிய ஒரு கவிதையையும் வாசித்தார். கொரொனா வைரஸால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, எடுக்க வேண்டிய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார். அடிக்கடி கைகளை கழுவவும், தங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் மக்களை அறிவுறுத்தினார். வீடியோவைப் பகிர்ந்த அமிதாப், "கொரொனா தொற்று கவலையளிக்கிறது. தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்" என்று குறிப்பிட்டார்.
அந்த வீடியோவில், 77 வயதான அமிதாப் பச்சன், நெல்லிக்காய் போன்ற விட்டமின் சி நிறைந்த பானங்களை உட்கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்தினார். வீடியோவின் முடிவில், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாப்பாக வைத்திருக்கவும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு கூறினார்.
அமிதாப் பச்சனை தொடர்ந்து, பிரியங்கா சோப்ராவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் கொரோனா வைரஸிலிருந்து "பாதுகாப்பாக இருக்க" பிரியங்கா மக்களுக்கு அறிவுறுத்துவதைக் காணலாம். இரு கை கூப்பி வணக்கம் சொல்லும் பல படங்களின் வீடியோ படத்தொகுப்பையும் பகிர்ந்துள்ளார். "இது வணக்கத்தைப் பற்றியது. கால மாற்றத்தின் போது மக்களை வாழ்த்த புது உலகில் ஒரு பழைய வழி. தயவுசெய்து அனைவரும் பாதுகாப்பாக வைத்திருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
’அரண்மனைக்கிளி’ மீனாட்சிக்கு ஸ்ரீவித்யா போட்ட அன்புக் கட்டளை!
கொரொனா வைரஸ் தாக்குதலால் உலகெங்கிலும் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், யாரும் பயப்படத் தேவையில்லை என இந்திய அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”