/tamil-ie/media/media_files/uploads/2019/01/amitabh-bachchan-and-aishwarya-rai-to-act-in-maniratnam-film.jpg)
amitabh bachchan and aishwarya rai to act in maniratnam film, அமிதாப் பச்சன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் சரித்திர கால திரைப்படத்தில் பாலிவுட் பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த லிஸ்டில் அமிதாப் பச்சன் கூட இருக்கிறாராம்.
‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் தனது அடுத்தப்படத்தின் பணிகளை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியன் செல்வன்’ கதையை மையமாக வைத்து திரைப்படமாக எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். இது அவரது நீண்ட நாள் கனவு என தெரிகிறது.
மணிரத்தினம் இயக்கத்தில் அமிதாப் பச்சன்
முன்னதாக இப்படத்தில் தளபதி விஜய், சிம்பு, விக்ரம் ஆகியோரை வைத்து படம் எடுக்க மணிரத்னம் முடிவு செய்திருந்ததாகவும், பின்னர் சீயான் விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி ஆகியோரை வைத்து எடுக்கலாம் என திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
மணிரத்னம் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன்... ராஜ ராஜ சோழனா சியான் விக்ரம்?
இந்நிலையில், பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடம் ஏற்று நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சமீப காலமாக தென்னிந்திய திரைப்படங்கள் மீது கவனம் செலுத்தும் அமிதாப் பச்சன், தெலுங்கில், சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்திலும், தமிழில் எஸ்.ஜேசூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
ஏற்கனவே, மணிரத்னத்தின் ‘இருவர்’, ‘ராவணன்’ போன்ற திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.