அடேங்கப்பா! ஏமி ஜாக்சன் வருங்கால கணவருக்கு இவ்வளவு சொத்தா?

மத்திராசப்பட்டினம் முதல் 2.0 வரை ஒரு கலக்கு கலக்கிய ஏமி ஜாக்சன் விரைவில் அவர் காதலனை திருமணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசபட்டினம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இந்த படத்தை அடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

ஏமி ஜாக்சன் காதலர் சொத்து மதிப்பு

விஜய், தனுஷ், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் மட்டுமே சில்வர் ஸ்கிரீனில் நடித்து வரும் ஏமிக்கு தற்போதைக்கு அடுத்த படம் எதுவும் இல்லை. எவ்வித கமிட்மண்டும் இப்போதைக்கு இல்லாத காரணத்தால், அவரது சொந்த நாடான லண்டனில் தனது காதலருடன் ரிலாக்ஸ் செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை எமி ஜாக்சனுக்கும் அவரது காதலருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிச்சதார்த்தம் நடந்தது. இதன் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

கையில் மோதிரம்… ஐ லவ் யூ மெசேஜ்… எமி ஜாக்சன் கமிட்டடா?

நடிகை ஏமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் ஜார்ஜ் என்பவரை காதலித்து வருகிறார். ஜார்ஜின் தந்தை ஆன்ட்ரஸ். இவர் அபிலிட்டி குரூப் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரின் சொத்து மதிப்பு மட்டும் 400 மில்லியன் பவுண்டுகள். இந்திய ரூபாய் மதிப்பில் இது 3,500 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close