New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/11/EJ8j5NWU8AAtL0A.png)
என் வாழ்க்கையின் வெளிச்சம்!
வீடியோவில் ஏமிக்கு ஒத்துழைப்பை தரும் வண்ணம், குழந்தையும் தலையசைத்து சிரிக்கிறது.
என் வாழ்க்கையின் வெளிச்சம்!
Amy Jackson's Tik Tok : நடிகை ஏமி ஜாக்சன் இயக்குனர் ஏ.எல் விஜய்யின் மதராசப்பட்டிணம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு தாண்டவம், கெத்து, தெறி, தங்க மகன், 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார். வெகு விரைவிலேயே ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டார்.
லாக் டவுனை சிறப்பாக மாற்ற, விஜய்யின் ’ஃபீல் குட்’ படங்கள்!
2.0 திரைப்படத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இதற்கிடையே இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை ஏமி காதலித்து வருவதாகவும், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியானது. பின்னர் இதனை ஏமி ஜாக்சனும், அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதற்கிடையே தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த வருடம் அன்னையர் தினத்தில் ரசிகர்களுக்கு அறிவித்தார் எமி.
Succumbed to TIKTOK #selfisolation pic.twitter.com/LcHDwZhDYB
— Amy Jackson (@iamAmyJackson) March 30, 2020
அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் அவ்வப்போது தன் குழந்தையுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஏமி. அந்த வகையில், தற்போது மகனுடன் இணைந்து அவர் டிக் டாக் வீடியோ ஒன்றையும் செய்துள்ளார். வீடியோவில் ஏமிக்கு ஒத்துழைப்பை தரும் வண்ணம், குழந்தையும் தலையசைத்து சிரிக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் இருப்பதால், மக்கள் தனிமைப்படுத்தலை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் ஏமியும் அவரது மகனும் இவ்வாறு பொழுதை கழிக்கிறார்கள்.
சூடேற்றிய அஜித் ரசிகரின் அந்த ‘கமெண்ட்’: பொங்கி எழுந்த குஷ்பு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.