சூடேற்றிய அஜித் ரசிகரின் அந்த ‘கமெண்ட்’: பொங்கி எழுந்த குஷ்பு

Ajith Fans : “உன்னைப் போன்ற ஒருவரை ரசிகர் என்று சொல்லிக் கொள்வதற்கு அஜித் வெட்கப்படுவார்”

Khushbu Sundar, ajith fans khushbu sundar twitter fight, tamil cinema
Khushbu Sundar

Khushbu : கொரோனா வைரஸ் உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. சீனாவில் உருவாகிய இந்தத் தொற்று, படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில், இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 7 பேருக்கு கொரோனா; தமிழகத்தில் 74 ஆனது

முன்னதாக தமிழகத்தில் அனைத்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படபிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் திரைத்துறையில் தினக்கூலிகளாக பணியாற்றும் ஆயிரக்கணக்கான பெஃப்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவும் வகையில், அனைத்து நடிகர்களும், தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தின் தலைவர், ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த், சூர்யா குடும்பத்தினர், தனுஷ், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். இந்நிலையில், நடிகை குஷ்புவும் அவரது கணவர் சுந்தர்.சி-யும் இணைந்து ரூ.5 லட்சம் நிதிவழங்குவதாக அறிவித்தனர். இதை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் குஷ்பு. அப்போது அஜித் ரசிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர் ஒருவர், ”தமிழ்நாட்டு மக்களுக்கு உதவாமல் , திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அந்தத் துறையினருக்கு மட்டும் தான் உதவுகிறார்கள்” என்று தரைகுறைவான வார்த்தைகளில் விமர்சித்தார்.

இந்த கமெண்டைப் பார்த்து, கோபமான குஷ்பு, “உன்னைப் போன்ற ஒருவரை ரசிகர் என்று சொல்லிக் கொள்வதற்கு அஜித் வெட்கப்படுவார்” என்று பதிலளித்திருந்தார். இதற்கு முன்பு நடிகை கஸ்தூரிக்கும், அஜித் ரசிகர்களுக்கும் ட்விட்டரில் சண்டை நடந்தது. பின்னர் அவர்களின் கொச்சையான பதிவுகளை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுக்கு டேக் செய்திருந்தார் கஸ்தூரி.

’நேரம் போலன்னா இப்படியெல்லாமா?’ – நடிகைகளின் படத் தொகுப்பு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Khushbu sundar ajith fans twitter fight

Next Story
’நேரம் போலன்னா இப்படியெல்லாமா?’ – நடிகைகளின் படத் தொகுப்புtamil celebrities latest images
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express