அங்காடித் தெரு நடிகைக்கு இப்படி ஒரு சோதனையா? கருணை காட்டும் சக நடிகர்-நடிகைகள்

ஒரு சின்ன ஊசிக்கு ரூ .2,500 முதல் ரூ .9,500 வரை செலவாகும். நான் நான்கு கீமோதெரபி அமர்வுகளை முடித்துவிட்டேன்.

Angadi Theru Sindhu Diagnosed with Breast Cancer
அங்காடி தெரு சிந்து

இயக்குநர் வசந்தபாலனின் ’அங்காடி தெரு’ படத்தில் பணிபுரிந்த நடிகை சிந்துவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Tamil News Today Live: இந்தியாவில் 90 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்புகள்

சமீபத்தில் அவரது இல்லத்திற்கு சென்று வந்த நகைச்சுவை நடிகர் பாண்டி, இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். “அங்காடி தெரு சிந்து மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நான் இதைக் கேட்டதும் உடனடியாக அவருடைய வீட்டிற்கு விரைந்தேன். அவர் படுக்கையில் இருக்கிறார். சிந்துவை குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனா மற்றும் லாக் டவுனின் ஆரம்ப நாட்களில் சிந்து பலருக்கு உதவியுள்ளார். அவருக்கு உதவ வேண்டிய நேரம் இது” என்றார் பாண்டி.

IPL 2020: சஞ்சு சாம்சனால் சென்னை சூப்பர் கிங்ஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

இதற்கிடையே சிந்து ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோவில் தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அது தற்போது முதுகெலும்புக்கு பரவியுள்ளதாகவும் கூறினார். ”ஒரு சின்ன ஊசிக்கு ரூ .2,500 முதல் ரூ .9,500 வரை செலவாகும். நான் நான்கு கீமோதெரபி அமர்வுகளை முடித்துவிட்டேன், இன்னும் பல உள்ளன. ஆனால் அதற்கான பண வசதி தற்போது என்னிடம் இல்லை. நான் பாண்டியை உதவுமாறு கேட்டுக்கொண்டேன். அவர் எனக்கு உதவினார். முந்தைய சிகிச்சைக்கு சாய் தீனா எனக்கு உதவினார். நடிகர்கள் கார்த்தி, ரோபோ சங்கர், சோனியா போஸ் வெங்கட், டேனியல் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் இதுவரை எனக்கு உதவினர்” என்றும் அவர் கூறினார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Angadi theru sindhu diagnosed with breast cancer

Next Story
கெத்தா… ஜோடியா… தனி விமானத்தில்! நயன்- விக்கி வைரல்nayanthara, vignesh shivan, actress nayanthara - vignesh shivan, nayanthara - vignesh shivan photos, நயன்தாரா, விக்னேஷ் சிவன் புகைப்படம், வைரல், தனி விமானத்தில் வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன், charted flyght, nayanthara photos viral, tamil cinema news, latest nayanthara news, trending news, viral news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com