’திருமணத்தில் கீ போர்டு’: பழைய நினைவுகளில் மூழ்கிய அனிருத்!

8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருமண கச்சேரியில் கீ போர்டுவாசிக்கும் வீடியோ.

தென்னிந்திய சினிமா ரசிகர்களால் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் அனிருத் ரவிச்சந்தரும் ஒருவர். இவர் ஒரு திருமண வரவேற்பில், கீ போர்டு வாசிக்கும் ஒரு பழைய வீடியோவை நேற்று  சமூக ஊடகங்களில் பகிர்ந்துக் கொண்டார். சற்று நேரத்தில் அந்த வீடியோ வைரலாகியது.

கொரோனா நடவடிக்கை : சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன்

வீடியோவை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்த அனிருத், அதை உருவாக்கிய நபருக்கு நன்றியும் தெரிவித்தார். “8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருமண கச்சேரியில் கீ போர்டுவாசிக்கும் வீடியோ… இந்த வீடியோவை உருவாக்கிய நபருக்கு நன்றி.. மிகவும் மனம் கவர்ந்தது” என்று அதில் குறிப்பிட்டிருந்தார் அனிருத்.

தனுஷ், ஷ்ருதி ஹாசன் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். அதற்கு முன்பு, அவர் தனது ஜின்க்ஸ் இசைக்குழுவுடன் பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அவரது இசைக்குழு இசை வட்டத்திலும், கல்லூரி விழாக்களிலும் மிகவும் பிரபலமானது. தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு டியூன் போடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள, மாஸ்டர் படத்திலும் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் அனிருத். ஏப்ரல் 9 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் வெளியீடு தள்ளிப் போயிருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள, ’குட்டி ஸ்டோரி’ மற்றும் ’வாத்தி கம்மிங்’ ஆகியப் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்வு

தற்போது, ஷங்கர் இயக்கும், கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் பணிபுரிகிறார் அனிருத்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close