Advertisment

டைட்டில்லயே ஒரு கெத்து இருக்கு! ரஜினிகாந்த் ரசிகர்களை உசுப்பேற்றிய ‘அண்ணாத்த’

மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர் ரஜினி ரசிகர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Annaatthe title look, rajinikanth

Annaatthe title look, rajinikanth

Superstar Rajinikanth : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'தர்பார்' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் சிவாவின் அடுத்தப் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரின் 168-வது படமான இதனை, தலைவர் 168 என்றே அழைத்து வந்தனர். இந்நிலையில் இந்தப் படத்திற்கு ‘அண்ணாத்த’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு கடந்த டிசம்பரில் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்தியாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – மெலனியா; புகைப்படங்கள்

படத்தின் டைட்டில் அறிவிப்பை டி இமானின் இசையுடன் சிறப்பு மோஷன் போஸ்டரில் வெளியிட்டது, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.  தமிழ் சினிமாவின் பல சிறந்த கேரக்டர்களில் ரஜினி நடித்துள்ளதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. இதனால் தங்கள் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர் ரஜினி ரசிகர்கள்.

ஸ்பெஷலாக தயாரான மெலனியா டிரம்ப் ஆடை; கவனிக்க வைத்த இந்திய டச்

சூப்பர் ஸ்டாரின் ட்ரீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.

எங்க தலைவர் சூப்பர் ஸ்டார் என நடிகர் சதிஷ் குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் அடுத்தப்படம் ‘அண்ணாத்த’ என எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார்.

’பேர கேட்ட உடனே சும்மா அதிருதுல்ல’ என நடிகர் சூரி குறிப்பிட்டுள்ளார்.

‘செம்ம தலைவா’ என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

பக்கா மாஸ் என நடிகர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் இடம்பெற்றது பெருமையளிக்கிறது என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

'அண்ணாத்த’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி, வேலா ராமமூர்த்தி, ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth Sun Pictures
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment