A.R.Rahman Climate Change Anthem : அமெரிக்க துணை தூதரகம் சார்பில், தண்ணீரின் அவசியம், சேமிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துக் கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தண்ணீர் அடிப்படை உரிமையாக வேண்டும். அப்போதுதான் ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும். தண்ணீர் தேவை குறித்து அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தண்ணீர் விழிப்புணர்வு குறித்து உலகளவில் ஒரு பாடலை விரைவில் வெளியிட உள்ளோம்” என்றார்.
புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச இசையமைப்பாளர்களுடன் இணைந்து ‘ஹேண்ட்ஸ் அரவுண்ட் த வேர்ல்ட்’ என்ற திட்டத்திற்காக அந்த பாடலை உருவாக்குகிறார் ரஹ்மான். காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாடல் இடம்பெறும். மனிநேய ஆர்வலர் கென் கிராகனின் முன்முயற்சிக்கு இணங்க இந்தப் பாடலை உருவாக்குகிறார் ரஹ்மான்.