திருவண்ணாமலையில் ரகசிய திருமணம் செய்துக் கொண்ட ’செம்பருத்தி’ மித்ரா

இதில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

Bharatha Naidu Gets Married to Bharath : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘செம்பருத்தி’ சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் மித்ரா என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வரும் பரதா நாயுடுவுக்கு சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை

2011-ஆம் ஆண்டு தமிழில் ‘தேன் மிட்டாய்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் பரதா. இதனைத் தொடர்ந்து மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ’அட்ரா மச்சான் விசிலு’ என்ற படத்திலும், 2017-ம் ஆண்டு வெளியான ‘நிரஞ்சனா’ படத்திலும் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்காத காரணத்தால், சின்னத்திரைக்குள் நுழைந்தார். ஆதி – பார்வதியின் காதலை மையப்படுத்திய செம்பருத்தி சீரியலில், வில்லியாக நடித்ததன் மூலம் மக்களிடம் பரிச்சயமானார் பரதா.

 

View this post on Instagram

 

A post shared by Vj sasikala (@vj_sasikala) on

சில மாதங்களுக்கு ஆண் ஒருவருடன் டிரடிஷனலாக அவர் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ இணையத்தில் வைரலானது. உடனே, பரதாவுக்கு திருமணமா என்ற கேள்வியும் எழுந்தது. பின்னர் அந்த நபர் பரதா காதலிக்கும் பரத் என்றும் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர்  திருவண்ணாமலையில் பரதா – பரத் ஆகியோரின் திருமணம் நடந்துள்ளது. இதில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

Sembaruthi Serial Bharatha Naidu gets married to bharath

மணக்கோலத்தில் செல்ஃபி

எப்போது ஐ.டி. விசாரணைக்கு ஆஜராகிறார் நடிகர் விஜய்?

இவர்களது திருமணம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் பரதாவின் தோழியும், சீரியல் நடைகையுமான இந்து ரவிச்சந்திரன் அவரது இன்ஸ்டாகிராமில், பரதா திருமண படங்களை பகிர்ந்திருந்தார். தவிர, பரதா நாயுடு ஆந்திராவைச் சேர்ந்தவர், பரத் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். பரதாவை போலவே, பரத்தும் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்தவர். தவிர, இவர்கள் முதன் முதலில் ‘செம்பருத்தி’ செட்டில் தான் சந்தித்துக் கொண்டார்களாம். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close