குளோபல் வார்மிங் பிரச்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் விழிப்புணர்வு பாடல் விரைவில் வெளியீடு!

சர்வதேச இசையமைப்பாளர்களுடன் இணைந்து ‘ஹேண்ட்ஸ் அரவுண்ட் த வேர்ல்ட்’ என்ற திட்டத்திற்காக அந்த பாடலை உருவாக்குகிறார் ரஹ்மான். 

By: Updated: February 11, 2020, 01:05:42 PM

A.R.Rahman Climate Change Anthem : அமெரிக்க துணை தூதரகம் சார்பில், தண்ணீரின் அவசியம், சேமிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துக் கொண்டார்.

மோடி எங்களை காப்பாற்றுங்கள்! கொரோனா பீதியில் கப்பலில் இருந்து கண்ணீர் விடும் இந்தியர்கள்!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தண்ணீர் அடிப்படை உரிமையாக வேண்டும். அப்போதுதான் ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும். தண்ணீர் தேவை குறித்து அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தண்ணீர் விழிப்புணர்வு குறித்து உலகளவில் ஒரு பாடலை விரைவில் வெளியிட உள்ளோம்” என்றார்.

புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச இசையமைப்பாளர்களுடன் இணைந்து ‘ஹேண்ட்ஸ் அரவுண்ட் த வேர்ல்ட்’ என்ற திட்டத்திற்காக அந்த பாடலை உருவாக்குகிறார் ரஹ்மான். காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாடல் இடம்பெறும். மனிநேய ஆர்வலர் கென் கிராகனின் முன்முயற்சிக்கு இணங்க இந்தப் பாடலை உருவாக்குகிறார் ரஹ்மான்.

திருவண்ணாமலையில் ரகசிய திருமணம் செய்துக் கொண்ட ’செம்பருத்தி’ மித்ரா

அந்த நிகழ்சியில் அமெரிக்க துணை தூதர் ராபர்ட் பர்கீஸ், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Ar rahman climate change anthem

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X