Advertisment
Presenting Partner
Desktop GIF

என்னுடைய மதிப்புகள் அல்ல; ஆனாலும் லெஸ்பியன் படத்திற்கு இசையமைத்தது ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

ஒரு படம் முக்கிய கருத்தை சொல்ல முயற்சிக்கிறது என்று தான் உணர்ந்தால், அந்த படம் தனது "மதிப்புகளுடன்" ஒத்துப்போகாவிட்டாலும், அந்த படத்திற்கு இசையமைக்க ஒத்துக்கொள்ள முடியும் - ஏ.ஆர்.ரஹ்மான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rahman

தீபா மேத்தாவின் ஃபயர் படத்திற்கு இசையமைப்பது குறித்து இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மனம் திறந்து தெரிவித்துள்ளார். (புகைப்படம்: ஏ.ஆர்.ரஹ்மான்/இன்ஸ்டாகிராம், எக்ஸ்பிரஸ் புகைப்படக் காப்பகம்)

ஏ.ஆர்.ரஹ்மான் தனது தனிப்பட்ட நம்பிக்கைகளை ஒரு படத்தின் அரசியலில் இருந்து பிரித்து வைத்திருக்க முடியும். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு படம் முக்கிய கருத்தை சொல்ல முயற்சிக்கிறது என்று தான் உணர்ந்தால், அந்த படம் தனது "மதிப்புகளுடன்" ஒத்துப்போகாவிட்டாலும், அந்த படத்திற்கு இசையமைக்க ஒத்துக்கொள்ள முடியும் என்று கூறுகிறார்.

Advertisment

1996 ஆம் ஆண்டு வெளியான தீபா மேத்தாவின் காதல் படமான ஃபயர் திரைப்படத்தை உதாரணமாக மேற்கோள் காட்டி, ரஹ்மான் அந்த படம் தனது மதிப்புகளுடன் ஒத்துப்போகவில்லை என்றாலும், அந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டதாகக் கூறினார். நந்திதா தாஸ் மற்றும் ஷபானா ஆஸ்மி நடித்த ஃபயர் திரைப்படம், லெஸ்பியன் உறவை வெளிப்படுத்திய முதல் இந்தியத் திரைப்படம்.

இதையும் படியுங்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் முன்புபோல் இல்லை… இப்போ நல்ல விதமாக நடத்துகிறார் : இயக்குனர் மணிரத்னம்

கலாட்டா பிளஸ் உடனான ஒரு நேர்காணலில், ரஹ்மானிடம் உங்கள் தனிப்பட்ட உணர்வுகளை ஒரு படத்தின் கருத்தில் இருந்து பிரிக்க முடியுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு ரஹ்மான், தான் பல்வேறு அனுபவங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்ததாகவும், அது தனது உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கியதாகவும், ஆனால் தான் உருவாக்கும் கலையில் அவை ஒருபோதும் தலையிடவில்லை,” என்றும் கூறினார்.

“நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். என்னுடைய கான்கிரீட் வீடு ஒரு சேரிக்குப் பக்கத்தில் இருந்தது. என் வீட்டுக்குப் பக்கத்தில் கமல்ஹாசன் உதவியாளராக இருந்த டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன் இருந்தார். நான் பேசும் போதும் அல்லது ஒரு கருத்தில் நிற்கும்போதும் எனது முடிவுகளில் தெளிவாக இருக்கிறேன்... அது நான் புத்தர் என்பது போல் இல்லை. நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன், எல்லாவிதமான படங்களையும் பார்த்திருக்கிறேன், அதனால் தொழில்முறையாக நான் அந்த விஷயங்களைச் சமாளிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்.”

“தனிப்பட்ட விருப்பமாக, நான் நிற்பது வேறு. நான் ஃபயர் படத்திற்கு இசையமைத்தபோதும் அதே நிலைப்பாடு தான், அது லெஸ்பியன் படம். இவை எனது மதிப்புகள் அல்லது எனது நிலைப்பாடுகளை குறிக்கவில்லை, ஆனாலும் நான் மனிதகுலத்திற்காக நிற்க முடியும் என்று உணர்கிறேன். இயக்குனர் ஏதோ முக்கியமான விஷயத்தைச் சொல்ல முயற்சிப்பதால் நான் அந்த திரைப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று உணர்ந்தேன். அதேபோல், பொன்னியின் செல்வன்: II படத்திலும் கொலை செய்யும் காட்சிகள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளன, ஆனால் அது வரலாறு, அதை உங்களால் மாற்ற முடியாது,” என்று ரஹ்மான் கூறினார்.

இந்திய கலாச்சாரத்தை 'களங்கபடுத்துவதாக' கூறி சமூக-அரசியல் அமைப்புகளின் குற்றச்சாட்டு மற்றும் எதிர்ப்புகளுடன், ஃபயர் திரைப்படம் நாட்டில் புயலாக வெளிப்பட்டது.

ரஹ்மானின் சமீபத்திய படம் மணிரத்னத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன்: II. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

A R Rahman Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment