/tamil-ie/media/media_files/uploads/2018/11/ar-rahman-praise-andhra-singer.jpg)
ar rahman praise andhra singer, ஏ.ஆர். ரகுமான்
ஏ.ஆர். ரகுமான் இசையில் பிரபலமான ‘என்னவளே’ பாடலின் தெலுங்கு வர்ஷனை ஆந்திரா பெண் ஒருவர் பாடிய வைரல் வீடியோவை ஏ.ஆர்.ஆர் கூட ரசித்திருக்கிறார்.
1994ம் வெளியான காதலன் திரைப்படத்தில் வரும் என்னவளே அடி என்னவளே என்ற பாடல் இன்றளவும் மிகப் பெரிய ஹிட் தான். ரகுமான் இசையமைப்பில் பாடகர் உன்னி கிருஷ்ணன் பாடியுள்ள இந்த பாடல் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு ஃபேவரைட்.
இந்த பாடலுக்காக உன்னி கிருஷ்ணன் -க்கு தேசிய விருது அளிக்கப்பட்டது. பொதுவாக கேட்பதர்கு இனிமையாக இருந்தாலும், இதனை மேடையில் பாடுவது சிரமம் என்றே பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால் அத்தகைய பாடலையும் மிகவும் எளிமையாக மெய் மறக்க செய்யும் குரலில் பாடியுள்ளார் ஆந்திர பெண் ஒருவர்.
ஆந்திர பெண்ணுக்கு ஏ.ஆர். ரகுமான் பாராட்டு
என்னவளே பாடலின் தெலுங்கு வர்ஷனை ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் பாடிய வீடியோ சமீபத்தில் வைரல் ஆனது. கேரளாவில் ராகேஷ் உன்னி என்ற விவசாயி ஒருவர் சங்கர் மகாதேவன் பாடிய பாடலை பாடி அசத்தினார். அதற்கு அடுத்தப்படியாக, சமூக வலைத்தளங்களில் ஃபேமஸ் ஆகியுள்ளார் இந்த ஆந்திரப் பெண்.
அரிய வேட்டையில் கிடைத்த பொக்கிஷம்... ஷங்கர் மகாதேவன் அதிரடி முடிவு
இவர் பாடிய பாடலை, பாட்டுக்கு இசையமைத்த சொந்தக்காரரான ஏ.ஆர்.ரகுமான் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். அதில், “யாரென்று தெரியவில்லை ஆனால் அழகான குரல்” என்று பகிர்ந்துள்ளார்.
ஆஸ்கர் நாயகன் வாயில் இருந்து பாராட்டுகளை கேட்க மாட்டோமா என்று ஏங்கி இருக்கும் இளம் பாடகர்களுக்கு மத்தியில் அவரிடமிருந்து பாராட்டைப் பெற்ற இந்த பெண்ணின் சாதனையையே சமூக வலைத்தளம் தற்போது பேசி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.