இனம், மொழி, மதம் உள்ளிட்டவைகளைக் கடந்தது தான் இசை. இன்றைய நிலையில் உலகம் முழுவதுமே கொரோனா குறித்த மன அழுத்தத்தில் மக்கள் இருக்கிறார்கள். இந்த சூழலில் தங்களுக்குள் பாஸிட்டிவிட்டியை உருவாக்கி, சமநிலையில் மனதை வைத்திருக்க இசை பெரும் பங்கு வகிக்கிறது.
’வாழ்க்கைக்குப் பிறகும் வாழனும்’ : அதிரடி முடிவெடுத்த ஜெனிலியா ரித்தேஷ் தம்பதி!
Sweet???? https://t.co/0Llak3dNwQ
— A.R.Rahman (@arrahman) July 1, 2020
இதற்கிடையே சஹானா என்ற சிறுமி சத்தமில்லாமல் ஓர் சாதனையை நிகழ்த்தியுள்ளார். பார்வையற்ற அந்த சிறுமி படு ஜோராக (Keyboard) கீ-போர்டு வாசிக்கிறார். அவருக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ’கோப்ரா’ படத்தில் இருந்து “தும்பி துள்ளல்” என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. தற்போது அந்த பாடலை இந்த சிறுமி வாசித்து வெளியிட்ட காணொளியை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘ஸ்வீட்’ என்று தலைப்பிட்டுள்ளார்.
Angel you are @sahana29143636 ???????????????????????????????? https://t.co/7kFwD7Ltck
— S J Suryah (@iam_SJSuryah) July 2, 2020
சேலரி அக்கவுண்ட் தொடங்க மிக சிறந்த வங்கி இதுதான்! காரணம் இருக்கு
அதோடு, சஹானா தனது அடுத்த சாதனையாக இரு கீ-போர்டு இசை கருவிகளில் ஒரு பக்கம் NGK படத்தின் பின்னணி இசையையும், மற்றொரு பக்கம் கத்தி படத்தின் பின்னணி இசையையும் வாசித்து, ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இதனை தற்போது நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஏற்கனவே சஹானா செய்த சாதனை Asia Book of Records என்ற தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”