’வாழ்க்கைக்குப் பிறகும் வாழனும்’ : அதிரடி முடிவெடுத்த ஜெனிலியா ரித்தேஷ் தம்பதி!

"நீங்கள் ஒருவருக்கு வழங்கக்கூடிய மிகப் பெரிய பரிசு, 'வாழ்க்கை பரிசு' தான்"

By: Updated: July 2, 2020, 04:02:32 PM

நடிகை ஜெனிலியா தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்பட்ட கதாநாயகிகளில் ஒருவர். ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தில் அவரது அப்பாவியான பப்ளி கதாபாத்திரம், அந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் கதாபாத்திரமாக உள்ளது. எவர் கிரீன் பியூட்டியான இவர், நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு படங்களில் இருந்து விலகி, குடும்பத்தை கவனித்து வருகிறார் ஜெனிலியா.

சீரியல் ஃபேன்ஸுக்கு குட் நியூஸ்! விரைவில் சின்னத்திரை படபிடிப்பு தொடக்கம்!

புதன்கிழமை மருத்துவர் தினத்தை முன்னிட்டு ஜெனிலியா தனது கணவருடன் தானும் உடல் உறுப்பு தானம் செய்வதாக உறுதியளித்துள்ளார்.  சமூக ஊடகங்களில், “என் கணவரும் நானும் நீண்ட காலமாக இதைப் பற்றி யோசித்து வருகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதைச் செய்ய முடியவில்லை. இன்று மருத்துவர் தினத்தன்று எங்கள் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளிக்கிறோம். எங்களுக்கு ஊக்கமளித்த டாக்டர் நோசர் ஷெரியருக்கும், ஃபோக்ஸிக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் ஒருவருக்கு வழங்கக்கூடிய மிகப் பெரிய பரிசு, ‘வாழ்க்கை பரிசு’ தான். இதில் பங்கெடுத்து உயிரைக் காப்பாற்ற உறுதிமொழி எடுத்து, உங்கள் உறுப்புகளை தானம் செய்ய முன்வர, உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.” என்று கோரிக்கை வைத்திருந்தார் ஜெனிலியா.

உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரோனா உறுதி – சென்னையில் தீவிர சிகிச்சை

ரித்தேஷ் தேஷ்முக் தனது பக்கத்தில், ””வாழ்க்கை பரிசு” என்பதை விட வேறு ஒருவருக்கு பெரிய பரிசு எதுவும் இல்லை. ஜெனெலியாவும் நானும் எங்கள் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளித்துள்ளோம். இதில் சேர்ந்து ‘வாழ்க்கைக்குப் பிறகும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்'” எனத் தெரிவித்துள்ளார். இந்த க்யூட் கப்பிளின் அதிரடி முடிவு ரசிகர்களிடையே பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Genelia deshmukh ritiesh deshmukh pledged to donate their body organs

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X