Rajinikanth, Kamal Haasan : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுக்க இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவிலும் இதுகுறித்த விழிப்புணர்வுகள் பரவலாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
உபதேசமெல்லாம் ஊருக்கு தானா முதல்வரே? ராமர் சிலையை வைக்க நல்ல நாள் பார்த்த யோகி…
இந்த உயிர்கொல்லி வைரஸ் இடமிருந்து மக்களை காப்பாற்ற அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அடுத்த 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தேவையில்லாமல் மக்கள் வெளியில் வரக்கூடாது என்பதை அரசு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சினிமா பிரபலங்களும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து வீடியோ பதிவுகளை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் அர்ஜுன், கொரோனா வைரஸ் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மிக மிக தேவையான விஷயங்கள் தவிர மற்ற எதற்கும் ரசிகர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தொடர்ந்த அவர், இத்தாலியிலுள்ள அவரது நண்பரிடம் பேசியதாகவும், அங்கே நடக்கும் விஷயங்கள் அச்சுறுத்தல் தரும் வேளையில், இந்தியாவின் நிலை குறித்து வருத்தப் படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பரீட்சை அறை போல தனித்தனியே அமர்ந்த மத்திய அமைச்சர்கள்: மோடி கடைபிடித்த சமூக விலகல்
தமிழகத்தைப் பொறுத்தவரை 95 சதவீத மக்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் ரசிகர்களாக இருப்பதால் அவர்கள் தங்கள் ரசிகர்களுக்கு ஏற்ற அறிவுரைகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தங்களின் பிரியத்திற்குரிய பிரபலங்கள் கூறினால் ரசிகர்கள் நிச்சயம் கேட்பார்கள் என்பதால் அவர்களை வீட்டில் இருக்கச் சொல்லி மேற்கூறிய நடிகர்கள் கூறவேண்டும் எனவும் அர்ஜுன் கேட்டுக்கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”