Sun TV Serial : நாயகி சீரியலில் என்ன செய்தாலும் தப்பிச்சு தப்பிச்சு வந்து கொசு மாதிரி நொய்யி நொய்யின்னு தொல்லை கொடுக்கிறாள் அனன்யா. அனுவின் புருஷன் மித்ரன் வீட்டில் புதிதாக தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்க... என்னடா புது பிரச்சனை என்று புலம்பிக் கொண்டு இருக்கின்றனர் ஆனந்தியும், திருவும். என்ன வந்தாலும் சமாளிப்போம் திரு, எனக்கு தான் நீங்க இருக்கீங்களே என்று அப்போது தான் ஆறுதலா ஆனந்தி திருவின் தோள் மீது சாய, அடடே காலம் கார்த்தாலே ஆஃபீசில் ரொமான்ஸான்னு வந்துட்டா அனன்யா.
ஏய்.. இங்கே எதுக்குடி நீ வந்தேன்னு ஆனந்தி கேட்க, ரொமான்ஸ் பண்ணலாம்னுதான்னு சொல்லி ஆனந்தியை கடுப்பேத்துகிறாள் அனன்யா. ஏய்.. நீயா போறியா, இல்லை செக்யுரிட்டியை விட்டு விரட்டவான்னு திரு கேட்க, என்ன திரு கொஞ்சம் கூட புத்தியில்லாம பேசறே, இவ்ளோ தில்லா ஃபைலோட உன் ஆஃபீஸ்ல வந்து உன் சேரில் உட்கார்ந்து பேசறேன்னா விஷயம் இல்லாம இருக்குமா. நானும் இந்த கம்பெனியில ஷேர் ஹோல்டர் தெரியுமான்னு அதிர்ச்சியாக்குகிறாள்.
நாயகி சீரியல் கதை அனன்யா திருவை அடைய, ஆனந்தியை ஏமாற்ற எதாவது செய்துகொண்டே இருப்பதும், அதை எல்லாம் ஆனந்தி மாஸ்டர் பிளான் போட்டு முறியடிப்பதுமாக பயணிக்கிறது. அடுத்தவ புருஷனுக்கு இவ்வளவு மெனக்கெடணுமா என்பது போலத்தான் சீரியல் பார்க்கும்போது எரிச்சல் வருது. ஆனாலும் பெரும்பாலான மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் நாயகி. சன் டிவி ரேட்டிங்கில் நம்பர் ஒன்னில் இருக்கும் நாயகி சீரியல் சமூக பொறுப்பில்லாத கதை.