Arya Workout Video : இயக்குநர் பா. ரஞ்சித், தனது அடுத்தப் படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்குகிறார். பாக்ஸிங்கை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஆர்யா பாக்ஸராக நடிக்கவுள்ளார். அதற்கு ஏற்றபடி தினமும் கடுமையாக ஒர்க் அவுட் செய்து தனது உடலை இன்னும் மெருகேற்றி வருகிறார். ஃபிட்னெஸில் ஆர்வம் உள்ள ஆர்யா, ரசிகர்களுக்கும் அந்த ஆர்வத்தைத் தூண்ட, ஒர்க் அவுட், சைக்கிளிங் வீடியோ / படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
யோகா, ரிலாக்ஸ், வழிபாடு – புத்துணர்ச்சியுடன் தொடங்கிய பொதுத் தேர்வு (ஸ்பெஷல் படங்கள்)
Sometimes u need to push Harder for Greater Results ????????????#PaRanjithFilm #Arya30 #Prelook #Preplook #chennaiMMA #SanthoshMaster @beemji @K9Studioz pic.twitter.com/2dHZMRYiap
— Arya (@arya_offl) March 2, 2020
அந்த வகையில், தற்போது ஆர்யா, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். வீடியோவைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும், ஆர்யா இவ்வளவு கஷ்டப் படுகிறாரா? எனத் தோன்றுகிறது. காரணம் ஒர்க் அவுட் செய்யும் போது அவர் வயிற்றில் ஓங்கி ஓங்கி அடிக்கிறார்கள். அடியையும் வாங்கிக் கொண்டு, சிரித்த முகத்துடன் பயிற்சி எடுக்கிறார் ஆர்யா.
இணையத்தைக் கலக்கும் ’குட்டி தல’ : ஆத்விக் அஜித் பிறந்தநாள் வீடியோ
இதனைப் பார்த்த அவரின் மனைவி சாயிஷா, ’இதைப் பார்க்கும் போது எனக்கு ரொம்ப வலிக்குது. ரொம்பவும் அதிகமான கடின உழைப்பு’ என்று சோகத்துடன் தெரிவித்திருக்கிறார்.
???????????????? https://t.co/fRsEoWVfat
— Arya (@arya_offl) March 2, 2020
‘சல்பேட்டா பரம்பரை’ என்று இந்தப் படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதியாகவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”