Avatar 2 First Look: பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்ட அவதாரின் அடுத்த பாகம் ரெடி! வைரலாகும் அவதார் 2 படங்கள்!

Avatar 2 First Look Poster: நீண்ட கால தயாரிப்பில் இருக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 2021 வெளியாகும் எனத் தெரிகிறது.

By: Published: January 9, 2020, 4:15:49 PM

Avatar 2 Teaser: ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த, அவதார் படத்தின் தொடர்ச்சியான “அவதார் 2” வின் முதல் பார்வையை வெளியிட்டார்.

தமிழகம் முழுவதும் தர்பார் ஃபீவர்: ரசிகர்களின் கொண்டாட்ட புகைப்பட தொகுப்பு

இந்தப் படம் 2021-ல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை சிதறடிக்கும் எனத் தெரிகிறது. 2009ம் ஆண்டில் அவதார் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதன் இரண்டாம் பாகம் 2013-ம் ஆண்டிலும், மூன்றாம் பாகம் 2015-ம் ஆண்டிலும் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். ஆனால், பல டெக்னிக்கல் சிக்கல்களால் அவதார் 2 படம் வெளியாக இவ்வளவு காலம் ஆகிவிட்டதாம்.

இந்நிலையில், லாஸ் வேகாஸில் நடந்த 2020 நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் (சிஇஎஸ்) திங்களன்று பண்டோராவின் புதிய படங்களை கேமரூன் வெளியிட்டார். அவதார் படத்தில் பூமியில் இருந்து பேண்டோரா எனும் வேற்று கிரகத்துக்கு மனிதர்கள் விண்கலம் ஏறி செல்வார்கள். பேண்டோராவின் அழகை தனித்துவமாக படம்பிடித்து உலகிற்கு வியப்புடன் கலந்த பிரம்மாண்ட படைப்பை ஜேம்ஸ் கேமரூன் காட்டியிருந்தார். அவதார் 2 மற்றும் அடுத்தடுத்த பாகங்களில் பேண்டோராவை தாண்டிய பல புதிய உலகங்களை உலக ரசிகர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் காட்டவுள்ளாராம்.

Tamilrockers: தர்பார் பாக்ஸ் ஆபீஸை பதம் பார்க்குமா?

நீண்ட கால தயாரிப்பில் இருக்கும் அவதார் 2 இன்னும் ஒருவருடம் தள்ளிப்போய் 2021 டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு. அவதார் 3 – 22 டிசம்பர் 2023, அவதார் 4 – 19 டிசம்பர் 2025, அவதார் 5 – 18 டிசம்பர் 2027 ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களில் சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், வின் டீசல் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Avatar 2 first look james cameron pandora

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X