Avengers Movie : COVID19 தொற்றுநோய் உலகெங்கிலும் இரண்டு லட்சம் பேரை பாதித்து, உலகப் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது. அதை எதிர்த்துப் போராடும் முயற்சியில் அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களை மூடுவதற்கு அனைத்து நாட்டு அரசுகளும் உத்தரவிட்டுள்ளன. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சர்வதேச அளவில் உள்ள பல உயர்மட்ட நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த லிஸ்டில் சமீபத்தில் இணைந்தவர், ஹாலிவுட் நட்சத்திரம் இட்ரிஸ் எல்பா. இவர் உலக அளவில் அதிக வசூல் சாதனை செய்த ’அவெஞ்சர்ஸ்’ படத்தில், ’தார்’ கதாபாத்திரத்தில் நடித்தவர்.
’எங்களுக்கு ஏதாவது நடந்தால் சிபிஎஸ்இ பொறுப்பேற்குமா?’ கொதிக்கும் மாணவர்கள்
47 வயதாகும் எல்பா, இந்த சூழ்நிலையை தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய நேரம் இது என்று உணர்ந்துள்ளார். கூட்டங்களில் இருந்து விலகி இருத்தல், சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கைகளை தவறாமல் கையாள வேண்டும் என சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டார்.
ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், ”இன்று காலை எனக்கு COVID-19 ரிசல்ட் பாஸிட்டிவாக வந்திருக்கிறது. நான் நன்றாக தான் இருக்கிறேன். இதுவரை கொரோனா இருப்பதற்கான எந்த அறிகுறியும் எனக்கு இல்லை, ஆனால் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் வீட்டிலேயே இருங்கள். என்னைப் பற்றி அவ்வப்போது தெரியப்படுத்துகிறேன். யாரும் பீதியடைய வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ரயில், பஸ், மெட்ரோக்களில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை – படத்தொகுப்பு
இந்த செய்தி அவெஞ்சர்ஸ் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு எல்பாவின் அந்த வீடியோ ட்விட்டரில் 10 லட்சம் லைக்குகளைக் கடந்திருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"