பூர்ணா மாதிரி ஊருக்கு ஒருத்தங்க இருந்தா அவ்ளோ தான்.. என்ன வில்லத்தனம்

கோர்ட்டில் போராட்டம் நடப்பதால், எந்த வழக்குகளும் நடக்காமல் இருக்கின்றன.

By: Updated: January 6, 2020, 05:08:25 PM

Azhagu Serial : சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?

ஜே.என்.யூ தாக்குதல்: வாட்ஸ்அப் மூலம் திட்டம் தீட்டப்பட்டதா?

திருநாவின் திருமணத்தை நிறுத்த அவனை கடத்தினாள் பூர்ணா. இருப்பினும் சுதாவும், ரவியும் திருநாவை தேடிப் பிடித்து, திருமணத்துக்கு தடை ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டார்கள். பூர்ணாவின் குணத்தை வெறுத்த மகேஷ் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறான். ஆனால் எப்படியாவது அவனுடன் வாழ்ந்தே தீருவேன் என சபதம் போட்டிருக்கும், பூர்ணா செய்வதெல்லாமே வேண்டாத வேலைகள் தான். மகேஷும், பிரியாவும் ஃப்ரெண்ட்லியாக பேசிக் கொள்வதை தவறாக சித்தரித்து நாடகமாடினாள். வேறு ஒரு பெண்ணை வைத்து மகேஷுக்கு ஃபோன் செய்து வீட்டிற்கு அழைத்த பூர்ணா, அவனையும் பிரியாவையும் வீட்டுக்குள் வைத்து பூட்டி, ஊரைக் கூட்டி அசிங்கப்படுத்தினாள்.

இப்படியே விட்டால், மகேஷின் கவனம் பிரியா மீது திரும்பி விடும் என நினைத்த அவள், பிரியா மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றாள். ஆனால் எதிர்பாராத விதமாக அதில் பிரியாவின் அம்மா ஈஸ்வரி சிக்கிக் கொண்டார். தற்போது உயிருக்குப் போராடும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ஈஸ்வரி.

தர்பார் பொங்கல்: புதுவித கொண்டாட்டங்களை துவங்கி விட்ட ரஜினி ரசிகர்கள்!

இதற்கெல்லாம் காரணம் பூர்ணா தான் என்பதைக் கண்டறிந்த போலீஸ் அவளை கைது செய்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றிருக்கிறது. மிகப்பெரிய வக்கீலான தனது அம்மா எப்படியும் முன் ஜாமின் வாங்கி வந்து விடுவார் என எண்ணிக் கொண்டிருந்தாள் பூர்ணா. ஆனால், கோர்ட்டில் போராட்டம் நடப்பதால், எந்த வழக்குகளும் நடக்காமல் இருக்கின்றன. இதனால் பூர்ணாவுக்கு ஜாமின் கிடைக்கவில்லை.

தொடர்ந்து பல வில்லத் தனங்களை செய்து வரும் பூர்ணாவுக்கு, இப்போதாவது தக்க தண்டனை வழங்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Azhagu serial sun tv poorna sudha revathy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X