/tamil-ie/media/media_files/uploads/2019/12/Azhagu-Serial-sun-tv.jpg)
Azhagu Serial sun tv
Azhagu Serial : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘அழகு’ சீரியல் பல முக்கியமான திருப்பங்களைக் கொண்டுள்ளது.
பாஸ்கர் மூலம் திருநாவை கடத்தி வைத்திருந்தாள் பூர்ணா. மணமேடையில் அர்ச்சனா தயாராக இருக்க, திருநா காணாமல் போன விஷயம் தெரிய வருகிறது. நிவி வந்து போனதால், அவளுடன் தான் அவன் ஓடிவிட்டான் என பிளேட்டை மாற்றுகிறாள் பூர்ணா.
திருநாவை மீட்க சுதாவின் நாடகம்: என்ன செய்ய போகிறாள் பூர்ணா
என்ன நடக்கும் திருநா திரும்பி வருவானா? அப்படியே வந்தாலும், அவன் யாரை திருமணம் செய்துக் கொள்வான்? காதலித்த நிவியையா அல்லது மணமேடையில் இருக்கும் அர்ச்சனாவையா என்று ரசிகர்களுக்கு பல கேள்விகள் எழுந்தன. பூர்ணா தான் திருநாவை கடத்தியிருக்க வேண்டும் என்ற சுதாவின் சந்தேகம் இறுதியில் உண்மையானது. சுதா கொடுத்த ஐடியாவும், போலீஸாரின் உதவியும் திருநாவை மீட்க கைக்கொடுத்தது.
பாஸ்கரிடம் பலத்த அடி வாங்கிய திருநா, மண்டையில் கட்டுடன் மண்டபத்திற்கு திரும்பினான். அவனைப் பார்த்த அனைவருக்கும் அப்போது தான் உயிரே வந்தது. ஒரு வழியாக அர்ச்சனா கழுத்தில் தாலியும் கட்டிவிட்டான். அப்படியெனில் எதற்காக செத்துப் போனதாக சொல்லப்பட்ட நிவியின் கதாபாத்திரத்தை உயிர்பித்தார்கள் என்ற கேள்வி பார்வையாளர்களிடம் எழுந்துள்ளது.
செல்ல நாய்களுக்காக மனம் உருகும் ’அழகு’ வில்லி பூர்ணா
மறுபுறம் மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கி விட வேண்டுமென திட்டம் போட்டு, கணவரிடம் சண்டை போடுகிறார் அர்ச்சனாவின் அம்மா. இதனை எதேச்சையாக அழகம்மை கேட்டு விடுகிறார். மாமியார் மனம் கோணாமல் நடந்துக் கொள்வாளா அர்ச்சனா? இல்லை அம்மா சொல்வதைக் கேட்டு அதிருப்திகளை சம்பாதிப்பாளா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.