Tamil Serial News : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கிய லட்சுமி’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏராளம். ஒரு பெண்ணுக்கு, அம்மாவாக, மனைவியாக, மருமகளாக இருக்கும் சவால்களை மையப்படுத்திய கதை.
அம்மாவாக ரசிகர்கள் மனதைக் கவர்ந்த மம்மூட்டி பட நடிகை!
பாக்கிய லட்சுமியின் மகன் செழியன், ஜெனி என்ற பெண்ணை காதலிக்கிறான். இதற்கிடையே பிரின்ஸுடன் அவளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால் கோபமடைந்த அவள், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக செழியனுக்கு வீடியோ அனுப்புகிறாள்.
”திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது, நீ என்னிடம் பேசுவதில்லை, நம்பரையும் பிளாக் செய்து விட்டாய், ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன்” என அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார் ஜெனி.
வீடியோவை பார்த்து பதறிப்போன செழியன், ஜெனி வீட்டிற்கு கிளம்புகிறார். அதை பார்த்த பாக்கியலட்சுமி என்னவென்று கேட்க, விஷயத்தைக் கூறுகிறார் செழியன். உடனே இருவரும் ஜெனி வீட்டிற்கு செல்கிறார்கள்.
செழியனும், பாக்யாவும் வருவதை பார்த்த மரியா இங்கு எதற்கு வந்தீர்கள் என கேட்கிறார். உடனே மரியாவிடம் அந்த வீடியோவை காட்டுகிறார்கள். அதை பார்த்து பதறிப் போய் கதவை தட்டுகிறார். வெகுநேரம் கதவைத் திறக்காததால், பாக்கியலட்சுமியும், செழியனும் ஜெனியிடம் கதவை திறக்கச் சொல்கிறார்கள்.
ஆனால் ஜெனியோ, செழியனுக்கும், எனக்கும் திருமணம் செய்து வைப்பதாக வாக்கு கொடுத்தால் மட்டுமே கதவை திறப்பேன் இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்கிறாள். வேறு வழியில்லாத பாக்கியலட்சுமி உங்கள் இருவருக்கும் நான் திருமணம் செய்து வைக்கிறேன் என ஜெனிக்கு வாக்கு தருகிறார்.
வீடு திரும்பியதும் அவ்வளவு அவசரமாக இருவரும் எங்க போனீங்க, என்று பாக்யாவின் மாமியார் கேட்கிறார். ஆனால் தாங்கள் கோவிலுக்கு சென்றதாக பொய் சொல்கிறார்கள். ஆனாலும், அதை நம்பாத ஈஸ்வரி, மகன் கோபி வந்தவுடன் இந்த விஷயத்தை மறுபடியும் ஆரம்பிக்கிறார். பின்னர் வேறுவழியில்லாத, பாக்யா உண்மையை சொல்கிறார்.
ரம்யாவிடம் உஷாராகத்தான் இருக்கனும் போல – பிக் பாஸ் விமர்சனம்
ஜெனி தனக்காக நிறைய தியாகம் பண்ணியிருக்கிறாள், இப்போது உயிரையும் விட துணிந்து விட்டாள் என்று கூறும் செழியன், தனக்கு ஜெனி வேண்டும் என்கிறான். இவர்களின் திருமணம் நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”