/tamil-ie/media/media_files/uploads/2022/04/vijay-beast-second-look-1200.jpg)
Vijay’s Beast movie box office collection cross Rs.200 crore: விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியுள்ளது. படத்திற்கான எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் யாஷின் கேஜிஎஃப் 2 இன் பலத்த போட்டியின் காரணமாக, படம் வசூலில் சரிவைச் சந்தித்துள்ளதாக ஒரு பிரிவினர் கூறும்போது, மற்றொரு பிரிவினர் திரைப்படத்தின் வணிக வெற்றியை உணர்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்க, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியானது.
இந்தநிலையில் படத்தின் வசூல் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவருகின்றன. ட்விட்டரில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள், மோசமான விமர்சனங்கள் இருந்தபோதிலும், படம் திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடுவது பற்றிய செய்திகளைப் பரப்புவதற்காக பீஸ்டின் பாக்ஸ் ஆபிஸ் எண்களின் ஷோ-பை-ஷோ தகவல்களை ட்வீட் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் அமைந்துள்ள ராம் முத்துராம் சினிமாஸின் ட்வீட்டர் பக்கத்தில், “#BeastInRamCinemas ஹவுஸ்புல் ரேம்பேஜ் குடும்ப பார்வையாளர்கள் விஜய்யை விரும்புகிறார்கள், பாக்ஸ் ஆபிஸ் நல்ல வசூல்”. என பதிவிட்டுள்ளனர்.
#BeastInRamCinemas HOUSEFULL RAMPAGE 🔥
— Ram Muthuram Cinemas (@RamCinemas) April 17, 2022
Family Audiences Likes Him
Box Office Can't Avoid 😎#Beastpic.twitter.com/Tji6HhBUCq
பீஸ்ட் வெளியான மூன்று நாட்களுக்குள் இந்தியா முழுவதும் அதன் டிக்கெட் விற்பனையில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஒரு டெட்லைன் அறிக்கையின்படி, படத்தின் முதல் வார இறுதியில் உலகளாவிய வசூல் $26 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: கருப்பு திராவிடன் நான், தமிழன் நான்.. தந்தைக்கு யுவன் பதிலடி கொடுத்தாரா?
கேரளா மற்றும் கர்நாடகா உட்பட பிற அண்டை மாநிலங்களில் பீஸ்டின் திரையரங்குகள் கேஜிஎஃப் 2 க்கான பெரும் தேவையால் பாதிக்கப்பட்டன. நீண்ட வார இறுதியில் விமர்சகர்களின் மோசமான மதிப்பீடுகள் மற்றும் கேஜிஎஃப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வேட்டைக்கு இடையில் பீஸ்ட் வெற்றி பெற்றது என்றே சொல்லலாம்.
தமிழ்நாட்டிலும் அதிகரித்து வரும் கிராக்கியைக் காணும் கேஜிஎஃப் 2 க்கு எதிராக வரும் நாட்களில் பீஸ்ட் எவ்வாறு தனது இடத்தைப் பிடிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.