scorecardresearch

பீஸ்ட் படத்தில் இருந்து இப்படியொரு வீடியோவா! இசைஞானியை சந்தித்த பிரபல நடிகரின் மகள்… மேலும் செய்திகள்

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

பீஸ்ட் படத்தின் ஒலிகளை மட்டும் கொண்டு 41 செகண்ட் ப்ரோமோ வீடியோவை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, காமெடி நடிகர் யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், இந்தப் படம் நாளை வெளியாகவுள்ளது. இதையொட்டி, படக் குழு புரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒலி அமைப்புகளை தனியாக எடிட் செய்து பாடக் காட்சியுடன் வெளியிட்டுள்ளது. இதனை டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.
இது படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

தனுஷ் பட அப்டேட்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில் தற்போது ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளையராஜாவுடன் நேரம் செலவிட்ட ரஜினி மகள்

இசையமைப்பாளர் இளையராஜா நடிகர் ரஜினிகாந்துக்கு நல்ல நண்பர். ரஜினியின் மகளா ஐஸ்வர்யா இளையராஜாவை அங்கிள் என்று அன்பாக அழைப்பவர்.

அவர் நேற்று இசைஞானியை சந்தித்து அவருடன் சில மணி நேரங்கள் நேரத்தை செலவிட்டுள்ளார்.
இசைஞானி ஹார்மோனியம் வாசிக்க அவர் அதை மகிழ்ச்சியுடன் கேட்பது போன்ற புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் எனது திங்கள்கிழமை மதியம் சிறப்பாக இருந்தது. எனது இளையராஜா அங்கிளுடன் நேரம் செலவிட்டால் எப்போதும் மகிழ்ச்சி அடைவேன் என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
இவர் சமீபத்தில் பயணி என்ற இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்தின் 61ஆவது பட ஷூட்டிங் தொடக்கம்

நடிகர் அஜித் குமார் கடைசியாக வலிமை படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்து அசத்தியிருந்தார்.

லைவ்வில் சாராவுக்கு மேரேஜ் ப்ரொபோஸ் – பதிலடி கொடுத்த அர்ச்சனா

பைக் ரேஸ் காட்சிகளில் நிஜமாகவே நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அந்தப் படத்தை இயக்கிய எச்.வினோத் உடன் மீண்டும் அடுத்த படத்தில் நடிக்கிறார் அஜித்.

இந்தப் படத்தையும் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களுக்கு பிறகு இதே தயாரிப்பாளர், இயக்குநர் உடன் அஜித் மீண்டும் இணைந்திருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Beast movie update latest ajith 61st movie update more cinema news