Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கண்ணம்மா மீதுள்ள கோபத்தில் வெண்பாவை திருமணம் செய்துக்கொள்ள பாரதி சம்மதம் தெரிவித்து, அந்த திருமணம் நடக்குமா? இல்லையா? என எதிர்பார்ப்பு எழுந்தது.
அசைவ உணவை அதிகம் விரும்பிய சிந்து சமவெளி மக்கள் ; வெளியானது ஆய்வு கட்டுரை
கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே, வெண்பாவுக்கு பாரதி மீது ஒருதலைக் காதல். எந்தளவுக்கு என்றால், அவன் காதலித்த பெண்ணை கொலை செய்யும் அளவுக்கு வெண்பாவுக்கு பாரதி மீது ஆசை. ஆனால் அவனோ கண்ணம்மாவை மணந்துக் கொள்ள, அவளது ஆசை நிராசையாகிறது. இதனால் பாரதியையும் கண்ணம்மாவையும் பிரிக்க பல்வேறு திட்டங்களை தீட்டுகிறாள். குறிப்பாக உனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லை என பாரதியை நம்ப வைக்கிறாள். இதை மருத்துவரான பாரதியும் நம்பி விடுகிறான்.
இதற்கிடையே கண்ணம்மா கர்ப்பம் தரிக்க, பாரதியை தூண்டி விடுகிறாள் வெண்பா. சந்தேக பார்வையை அதிகரிக்கிறான் பாரதி. கண்ணம்மா வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையது இல்லை என்ற முடிவுக்கு வந்து, கண்ணம்மா நடத்தைக் கெட்டவள் என்கிறான். இதனால் கோபமான கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பின்னர் அவளுக்கு இரட்டை பெண் குழந்தை பிறக்கிறது. அவள் மயக்கத்தில் இருக்கும் போதே, ஒரு குழந்தையை எடுத்து வந்து தன் வீட்டில் வளர்க்கிறார் மாமியார் செளந்தர்யா. இந்த விஷயம் கண்ணம்மாவுக்கு தெரியாது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் வெண்பா, நாம் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்கிறாள். முதலில் மறுக்கும் பாரதி பின்னர் ஒப்புக் கொள்கிறான். யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக் கொள்ள இருவரும் முடிவு செய்கிறார்கள். பாரதியின் அம்மா, அப்பா இருவரும் தற்போது ஊரில் இல்லை. அதனால் கோயிலில் பாரதியை மாலையும் கழுத்துமாக பார்த்த அவரது மேனேஜரின் மகள் செளந்தர்யாவுக்கு ஃபோன் செய்து சொல்கிறார். இதை பாரதியிடம் உறுதிப்படுத்த போன் செய்து கேட்ட அம்மாவிடம் தனது நண்பனுக்கு திருமணம் என்றும், திடீரென தான் துணை மாப்பிளையாகும் நிலை ஏற்பட்டதாகவும் சொல்கிறான். இதை நம்பினாலும், எதற்கும் இருக்கட்டும் என அகிலன் காதில் போட்டு வைக்கிறார்.
இந்நிலையில் அடுத்த நாள் மீண்டும் திருமணம் செய்துக் கொள்ள வேறு கோயிலுக்கு செல்கிறார்கள். அங்கு பாரதியையும், வெண்பாவையும் பார்த்த ஒரு பெண் அஞ்சலிக்கு ஃபோன் செய்து சொல்கிறார். இதைக் கேள்விப்பட்ட அஞ்சலி, உடனே தனது அம்மாவுக்கு தகவல் தெரிவிக்கிறாள். ”வெண்பாவை மட்டும் பாரதி திருமணம் செய்துக் கொண்டால், நமக்கு தான் பிரச்னை. கண்ணம்மா வாயில்லா பூச்சி, நம்ம சொல்றத அப்பப்ப கேப்பா, ஆனா வெண்பா அப்படி இல்ல. அதனால உன் கணவரிடம் சொல்லி உடனே இந்த திருமணத்தை நிறுத்துவதற்கான வேலையை செய், நான் போய் கண்ணம்மாவை கூப்பிட்டு வருகிறேன்” என்கிறார் அஞ்சலியின் அம்மா.
பண்டிகைக்கு ஊர் போறவங்க இப்பவே புக் பண்ணிக்கோங்க… 4 சிறப்பு ரயில்கள் உங்களுக்காக!
இந்த விஷயத்தை அகிலிடம் சொல்லும் அஞ்சலி, நாம் திருமணத்தை நிறுத்த வேண்டும், சீக்கிரம் வா என்கிறாள். வெண்பா இங்க வந்தா என்ன, லெஃப்ட்ல ஹேண்டில் பண்ணுவா, கண்ணம்மா கிட்ட தான் உருட்டி மிரட்ட முடியும் என உண்மையையும் போட்டுடைக்கிறாள். அப்போ கூட கண்ணம்மா அண்ணி நல்லா இருக்கணும்ன்னு நீ இதையெல்லாம் பண்ணல, என்ற அகில் கோயிலை நோக்கி விரைகிறான். இதற்கிடையே பாரதி-வெண்பா திருமணத்தை கண்ணம்மா, அஞ்சலி, அகில் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்துவது போல ப்ரோமோவும் வெளியானது. என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”