Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
’எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் முடிவை சொல்றேன்’ – ரஜினிகாந்த்
வெண்பாவின் சூழ்ச்சியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து விட்டார்கள். கண்ணம்மா மீது வெறுப்பு வரும் படி அவள் கர்ப்பத்தை தவறாக சித்தரித்து, பாரதியின் மனதை மாற்றினாள் வெண்பா. இதனால் வீட்டை விட்டு வெளியேறினாள் கண்ணம்மா. இதற்கிடையே பிரசவ வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவளுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. ஆனந்த கண்ணீருடன் குழந்தைகளைப் பார்த்து, நெகிழ்ந்து போகிறார் செளந்தர்யா. இரட்டை குழந்தைகளை வளர்க்க கண்ணம்மா சிரமப்படுவாள் என்றும், எப்படியாவது அவளை பாரதியுடன் சேர்த்து வைக்க இதை விட்டால் வேறு வழியில்லை எனவும், கறுப்பான குழந்தையை தூக்கிச் செல்கிறார் செளந்தர்யா. கண்ணமாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது, நர்ஸ், செளந்தர்யா, அறிவு மற்றும் அகில் ஆகியோருக்கு மட்டும் தான் தெரியும்.
அதனால் கண்ணம்மாவிடம் ஒரு குழந்தையும், செளந்தர்யாவிடம் (பாரதியிடம்) இன்னொரு குழந்தையும் வளர்கிறது. இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே கோயிலில் பெயர் சூட்டு விழா நடக்கிறது. தனது அத்தையின் பெயரான செளந்தர்யாவுடன் லட்சுமி என்பதை சேர்த்து, செளந்தர்ய லட்சுமி என குழந்தைக்கு பெயர் வைக்கிறாள் கண்ணம்மா. செளந்தர்யாவிடம் வளரும் குழந்தைக்கு ஹேமா என பெயர் வைக்கப்படுகிறது.
’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி
இந்நிலையில், கண்ணம்மாவின் குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அதனால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். குழந்தையின் இதயத்தில் ஏதோ பிரச்னை எனக் கண்டறிந்து, உடனே ஆபரேஷன் பண்ணனும் என்கிறார்கள். ஆபரேஷன் தியேட்டர் வாசலில் கண்ணீருடன் கண்ணம்மா காத்திருக்க, அங்கு பாரதி வருகிறான். ‘இவங்களோட குழந்தைக்கு தான் ஆபரேஷன்’ என பாரதியிடம் தெரிவிக்கப்படுகிறது. அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு ஆபரேஷனை முடிக்கிறான் பாரதி. தக்க நேரத்தில் அவன் செய்த உதவிக்கு, அழுதுக் கொண்டே நன்றி சொல்கிறாள். இது பாரதியின் மனதை மாற்றுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”