Tamil Serial News : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தான் தற்போது டி.ஆர்.பி-யில் முன்னணியில் உள்ளது.
கணவன் பாரதியின் சந்தேகத்தால் தற்போது வீட்டை விட்டு வெளியேறி, ஆசிரமத்தில் இருக்கிறாள் கண்ணம்மா. முன்பு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்த போது அதை தெரிந்துக் கொண்ட அவளது மாமியார் சௌந்தர்யா அவளை வீட்டுக்கு அழைத்தும் அதை ஏற்க மறுக்கிறாள் கண்ணம்மா. அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெட்ரோல் பங்க் ஓனரின் மூலம் பணம் கொடுக்கிறார் சௌந்தர்யா.
கடைசி வாய்ப்பு.. மொத்த எதிர்பார்பும் சென்னை அணியின் மீது! சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ்!
அந்த உண்மையை தெரிந்து கொண்ட கண்ணம்மா, தன் வேலையை விட்டுச் செல்கிறார். வேறு எங்கு போவது என தெரியாமல் சுற்றித் திரிந்தவள், ஆதரவற்றவர்கள் வாழும் ஆசிரமத்தில் சேர்கிறாள். ஆசிரமத்தில் சேர்ந்த கண்ணம்மாவை கொலை செய்ய, சமையல்கார பெண் கோமதி மூலம் திட்டம் போடுகிறாள் வெண்பா. ஆசிரமத்தில் கண்ணம்மா இருப்பதை தெரிந்து கொண்ட சௌந்தர்யா,மறைமுகமாக பல உதவிகளை செய்கிறார்.
எம்.எல்.ஏ மூலமாக உணவு, புடவை, பணம் அனைத்தையும் ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கிறார். சிசிடிவி கேமரா பொறுத்தி கண்ணம்மாவை பார்த்து ரசிக்கும் செளந்தர்யா, கோமதி கொடுக்கும் தொல்லைகளை பார்த்து, அவளை வேலையை விட்டு அனுப்பி விடுகிறார்.
’நீங்க எதாவது நோண்டினே இருப்பீங்க’ ரியோ-சுரேஷ் மோதல்
கண்ணம்மாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் துர்கா, அவளது கணவன் பாரதியை பார்த்து எல்லா பிரச்சனைக்கும் காரணம் வெண்பா தான் என்ற உண்மையை சொல்கிறான். ஆனால் அதை நம்பாமல் துர்காவை துரத்தி விடுகிறான் பாரதி. பின்னர் ஆசிரமத்துக்கு சென்று, “சோற்றுக்கு வழியில்லை செலவுக்கு காசில்லை என்றால் என் காலில் விழுந்து கெஞ்சு” என்கிறான் பாரதி. அதைக்கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கண்ணம்மா, ”சோற்றுக்கு வழியில்லை என்றாலும் பட்டினி கிடந்து சாவேனே தவிர உன்னை மாதிரி ஈனப்பிறவியை நம்பி பொழைக்க மாட்டேன்” என்று சொல்லி பணத்தை முகத்தில் வீசி எறிகிறாள். அடுத்து வரும் நாட்கள் பாரதி கண்ணம்மா ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் எனத் தெரிகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”