Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருக்கிறது. வெண்பாவின் சதியால் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து, இரட்டைக் குழந்தைகளும் பிரிந்து விட்டார்கள்.
நில தகராறில் ஏற்பட்ட பிரச்னை: பழனி துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
கண்ணம்மாவுக்கு பிரசவம் பார்த்த பாரதி, குழந்தையை நர்ஸ் கைகளில் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்படுகிறான். அவன் சென்றதும் கண்ணம்மாவிற்கு மீண்டும் வலி ஏற்படுகிறது. அப்போது மற்றுமொரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள் கண்ணம்மா. ஆனந்த கண்ணீருடன் குழந்தைகளைப் பார்த்து, நெகிழ்ந்து போகிறார் செளந்தர்யா. இரட்டை குழந்தைகளை வளர்க்க கண்ணம்மா சிரமப்படுவாள் என்றும், எப்படியாவது அவளை பாரதியுடன் சேர்த்து வைக்க இதை விட்டால் வேறு வழியில்லை எனவும், கறுப்பான குழந்தையை தூக்கிச் செல்கிறார் செளந்தர்யா. கண்ணமாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது, நர்ஸ், செளந்தர்யா, அறிவு மற்றும் அகில் ஆகியோருக்கு மட்டும் தான் தெரியும்.
தான் ஒரு குழந்தையை இல்லத்தில் இருந்து தூக்கி வந்ததாக சொல்லி, அந்த குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார் செளந்தர்யா. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாரதியை, குழந்தையுடன் நெருக்கமாக்க முயற்சி செய்கிறார் செளந்தர்யா. குழந்தைக்கு டிரெஸ் வாங்கி வரும் படி பாரதியிடம் சொல்ல, அவனோ வேண்டா வெறுப்பாக போகிறான். அங்கு குழந்தைக்கு அளவு தெரியாமல் குழம்பி நிற்க, பக்கத்தில் பெண் ஒருவர் ஒரு குழந்தையை வைத்திருக்கிறார். உடனே அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த பாரதி, குழந்தையை கையில் வாங்கி, கொஞ்சி விட்டு, அதே அளவில் வீட்டிலிருக்கும் குழந்தைக்கு உடை வாங்குகிறான். அந்த நேரம் பார்த்து கண்ணம்மா அங்கு வர, பாரதிக்கு பயங்கர ஷாக். அந்த குழந்தைக்கு கண்ணம்மா தான் தாய் என்பதை தெரிந்துக் கொண்ட பாரதிக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது.
‘காதல் கண்ணை மறைக்குது’, ‘சிடுமூஞ்சி மேக்ஸ்’ – பற்றவைத்த பிக் பாஸ்
வீட்டிற்கு வந்து உடையைக் கொடுக்கிறான். அதைப் பார்த்த அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. ’எப்படி இவ்வளவு கரெக்டா எடுத்த’ என கேட்கிறார்கள். ’கடைல ஒருத்தங்களோட குழந்தைய வச்சி, அதே சைஸ்ல எடுத்தேன்’ என்கிறான் பாரதி. இரட்டை குழந்தை உண்மை எப்போது பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் தெரிய வரும்? பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”