Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல், தற்போது படு சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கிறது. கண்ணம்மா மீதுள்ள கோபத்தில் வெண்பாவை திருமணம் செய்துக்கொள்ள பாரதி சம்மதம் தெரிவித்து, அந்த திருமணம் நடக்குமா? இல்லையா? என ரசிகர்கள் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களுக்கு 30 வயதா? உடனே இந்த பாலிசிய எடுத்து வச்சிடுங்க!
கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே, வெண்பாவுக்கு பாரதி மீது ஒருதலைக் காதல். எந்தளவுக்கு என்றால், அவன் காதலித்த பெண்ணை கொலை செய்யும் அளவுக்கு வெண்பாவுக்கு பாரதி மீது ஆசை. ஆனால் அவனோ கண்ணம்மாவை மணந்துக் கொள்ள, அவளது ஆசை நிராசையாகிறது. இதனால் பாரதியையும் கண்ணம்மாவையும் பிரிக்க பல்வேறு திட்டங்களை தீட்டுகிறாள். குறிப்பாக உனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லை என பாரதியை நம்ப வைக்கிறாள். இதை மருத்துவரான பாரதியும் நம்பி விடுகிறான்.
இதற்கிடையே கண்ணம்மா கர்ப்பம் தரிக்க, பாரதியை தூண்டி விடுகிறாள் வெண்பா. சந்தேக பார்வையை அதிகரிக்கிறான் பாரதி. கண்ணம்மா வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையது இல்லை என்ற முடிவுக்கு வந்து, கண்ணம்மா நடத்தைக் கெட்டவள் என்கிறான். இதனால் கோபமான கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பின்னர் அவளுக்கு இரட்டை பெண் குழந்தை பிறக்கிறது. அவள் மயக்கத்தில் இருக்கும் போதே, ஒரு குழந்தையை எடுத்து வந்து தன் வீட்டில் வளர்க்கிறார் மாமியார் செளந்தர்யா. இந்த விஷயம் கண்ணம்மாவுக்கு தெரியாது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் வெண்பா, நாம் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்கிறாள். முதலில் மறுக்கும் பாரதி பின்னர் ஒப்புக் கொள்கிறான். யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக் கொள்ள இருவரும் முடிவு செய்கிறார்கள். காலை நேரத்தில் சீக்கிரமே பட்டு வேட்டி, பட்டு சட்டை போட்டு மாப்பிள்ளை கோலத்தில் கிளம்புகிறான் பாரதி. வீட்டில் இருப்பவர்கள் என்ன விசேஷம் என ஆச்சர்யப்படுகிறார்கள்.
சனம் இல்லாமல் பிக் பாஸ் இல்லை.. நெட்டிசன்கள் குமுறல்!
நண்பனின் திருமணத்துக்கு போவதாக, பொய் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்புகிறான் பாரதி. கோயிலில் வெண்பாவும், பாரதியும் மாலையும் கழுத்துமாக நிற்க, தாலி கட்டும் நேரத்தில் கண்ணம்மாவின் அப்பா சாமி கும்பிட வருகிறார். இதைப் பார்த்து அதிர்ந்து போன இருவரும் மறைந்துக் கொள்கிறார்கள். போதாகுறைக்கு செளந்தர்யாவுக்கு தெரிந்த பெண்ணும் பார்த்து விடுகிறார். அதோடு அவருக்கு ஃபோன் செய்ய முயல்கிறார். என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்...
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”