பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசன் 'எபிக்' தருனங்களுடன் நேற்று தொடங்கியுள்ளது. அது என்ன எபிக் தருணங்கள் என்று கேட்கிறீர்களா? 'என் வாழ்க்கையே என் நாய்க்குட்டி தான்.. அதை பத்திரமா பார்த்துக்கோங்க' என்று கலங்கிய ஷெரின்.. அதாங்க 'நம்ம வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே' ஷெரின் தான்.. என்ன..., இப்போ ரொம்ப வயதுக்கு வந்துட்டாங்க... வயசாகாத பின்ன!
அப்புறம், 'ஜீரோவைத் தாண்டி கீழே சென்ற நான், இப்போது மீண்டும் புதிதாக கற்றுக் கொள்ள வந்திருக்கிறேன்' என்று சொன்ன நம்ம ஆட்டோகிராஃப் சேரன்.... என்னது சேரனா??? என்று ஜெர்க் ஆக வேண்டாம். பலருக்கும் அதே ஜெர்க் தான்.
மேலும் படிக்க - பிக்பாஸ் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்ஸ்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்
'நா நூறுநாள் இருந்துட்டு தான் வெளியே வருவேன்' என்று கெத்து காட்டிய மோகன் வைத்யா-வுக்கு கட்டிப்புடி வைத்தியம் கொடுத்து உள்ளே அனுப்பி வைத்த கமல், என்று இப்படி பல தருணங்கள் ஒரேநாளில் நடந்தால் அது எபிக் தானே! சரி டென்ஷன் ஆகாதீங்க..
போட்டியாளர்களும் எல்லோரும் வீட்டுக்குள்ள வந்தாச்சு... சரி, முதல் வாரம் என்ன டாபிக் கொண்டு பிக்பாஸ் டிஆர்பி-யை அதிகரிக்கலாம் என்று நமது சிறு மூளை கொண்டு நாம் யோசித்த போது, ஸ்பீட் பிரேக்கரே இல்லாமல் வந்து விழுந்தது தண்ணீர் பிரச்சனை. அட ஆமாம்-ல... சிட்டியில, ஒருத்தர் வீட்டு தொட்டியிலும் தண்ணீர் இல்ல... அப்போ பிக்பாஸ் வீட்டுல ஏன், தண்ணீரை மையமா வச்சு ஏதாச்சும் பண்ணி, அதன் மூலம் பிக்பாஸை மக்கள் திட்ட வச்சா, டிஆர்பி எப்படி எகிறும் தானே!. இப்போ, அதுதானேப்பா முக்கிய பிரச்சனை என்று நம் சிறுமூளை யோசித்துக் கொண்டிருக்க, அப்படியே நம் சிந்தனைக்கு ஏற்றா மாதிரி ஒரு வீடியோ புரோமோவை வெளியிட்டிருக்கிறது பிக்பாஸ் குழு.
அதில், பிக்பாஸ் வீட்டில், தண்ணீருக்கும், கேஸுக்கும் அளவுகோல் வைத்திருக்கிறார் பிக்பாஸ் அங்கிள். அதை போட்டியாளர்களுக்கு அவர் அறிவிக்க, அதற்கு எல்லோரும் கைத்தட்ட, கடுப்பான பாத்திமா பாபு, 'இது கைத்தட்ட வேண்டிய விஷயம் அல்ல' என்று கூற, 'அட... அவங்க அறிமுகம்படுத்தின திட்டத்துக்கு கைத்தட்டுனோமுங்க' என்று 'இயக்குனர்' சேரன் பதிலளிக்க, ஆஹா தண்ணீர் மேட்டர் ஒர்க் அவுட் ஆகிடுச்சு என்று பிக்பாஸ் அங்கிள் மைண்ட்டில் பல்ப் ஏறிய, நாமும் அப்படியே விடை பெறுவோம்.
June 2019
பிக்பாஸ் வீட்டின் முதல் நாள் குத்தாட்டம்
June 2019
இருக்கு.. இனி நிறைய சம்பவம் இருக்கு..