Bigg Boss Tamil 3: ‘கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்யும் சாண்டி’! கககபோ!

பார்வையாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போட்டியாளர்கள் விபரமும் தெரிந்து விட்டது.

bigg boss promo today
bigg boss promo today

Bigg Boss Tamil 3: அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி விட்டது.

Bigg Boss 3 Tamil : பிக்பாஸ் தமிழ் சீசன் 3 : இளசுகளுக்காக ஷெரீன், ரேஷ்மா….நடுத்தர வயதினருக்காக சேரன், பாத்திமா பாபு – உட்கார்ந்து யோசிச்சிருக்கான்யா விஜய் டிவி

பார்வையாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போட்டியாளர்கள் விபரமும் தெரிந்து விட்டது. கடந்த 2017-ல் தமிழுக்கு அறிமுகமான இந்நிகழ்ச்சியை 3-வது முறையாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். முதல் சீசனில் ஓவியா, காயத்ரி, சக்தி, ஆரவ், ஆர்த்தி, சிநேகன், வையாபுரி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டார்கள். போட்டியின் இறுதியில் ஆரவ் டைட்டில் வின்னரானார்.

Bigg Boss Tamil 3 Contestants list: டிஸைன் டிஸைனா ஆட்கள் தேர்வு செய்திருக்காங்கப்பா… பிக் பாஸ் 3 செமையா இருக்கும் போல..!

பின்னர் கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மஹத், ஷாரிக், மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா ஆனந்த், வைஷ்ணவி, ரித்விகா, ஜனனி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களம் இறங்கினார்கள். இதில் ரித்விகா ’பிக்பாஸ் 2’ டைட்டிலை தட்டிச் சென்றார்.

 

Live Blog

Bigg Boss Tamil Season 3, Viewers Response

பிக்பாஸ் நிகழ்ச்சி 3-வது சீசனைப் பற்றி பார்வையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?


16:46 (IST)24 Jun 2019

பிக்பாஸ் அட்ராசிட்டீஸ் ஸ்டார்ட்!

பிக்பாஸ் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புரமோவில், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மோகன் வித்யாவிடம் பாடல் கற்றுக் கொள்கிறாரா? அல்லது வைத்யாவுக்கு பாடல் கற்றுக் கொடுக்கிறாரா? என்று சுத்தமாக ஒண்ணுமே புரியாத மாதிரி க்ளிப்பிங்ஸ் இடம் பெற்றுள்ளது. சென்றாயன் பணியை கனக்கச்சிதமாக தொடங்கியிருக்கிறார்.

15:07 (IST)24 Jun 2019

தண்ணீருக்கும் எரிவாயுவிற்கும் மீட்டர்

அத்தியாவசிய பொருட்களை வீணடிக்காமல் இருப்பதற்காக தண்ணீருக்கும் எரிவாயுவிற்கும் மீட்டர் பொருத்தியுள்ளார் பிக்பாஸ்

14:47 (IST)24 Jun 2019

ரஜினி பாடலுடன் முதல் ப்ரோமோ

ஹவுஸ் மேட்ஸ் ஒரு நாளைக் கழித்த நிலையில் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

14:35 (IST)24 Jun 2019

எண்டெர்டெயின்மெண்ட் இருக்கு

பிக்பாஸ் 1-ஐப் போல் இல்லா விட்டாலும் இரண்டை விட நல்ல எண்டெர்டெயின்மெண்ட் இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள். 

13:47 (IST)24 Jun 2019

முதல் நாளில் மனங்களை கவர்ந்த லொஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல்நாளில் இலங்கை செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா மக்களின் மனதை வென்றிருப்பதாக ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

12:55 (IST)24 Jun 2019

என்ன சொல்கிறார் அபிராமி

பிக்பாஸ் வீட்டுள் நுழைவதற்கு முன் அபிராமி வெங்கடாச்சலம், ’நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன். சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன்’ என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

12:32 (IST)24 Jun 2019

வாக்கு சேகரிக்க ரெடியான லொஸ்லியா

பிக்பாஸ் வீட்டுள் இருக்கும் இலங்கை செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா, ட்விட்டரில் தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்த அக்கவுண்டை லொஸ்லியாவின் நண்பர் ஹேண்டில் செய்கிறாராம். 

11:27 (IST)24 Jun 2019

கடந்த வருட போட்டியாளர்களுடன் ஒப்பீடு

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி போட்டியாளர்களை இந்த வருட போட்டியாளர்களுடன் ஒப்பிட்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். என்ன கடந்த முறை 16 பேர், இந்தாண்டு 15 பேர் அவ்வளவு தான் வித்தியாசம். 

11:16 (IST)24 Jun 2019

Bigg Boss season 3: இவர்கள் பெண்கள் ஓட்டை குறிவைத்து களம் இறக்கப்பட்டுள்ளனர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், மலேசிய பாடகர் முகென், இலங்கை மாடல் தர்ஷன் போட்டியாளர்களாகக் களமிறங்கியிருக்கிறார்கள். பெண்களின் வாக்குகளை குறி வைத்தே இவர்கள் களம் இறக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பேசிக் கொள்கிறார்கள். 

10:53 (IST)24 Jun 2019

Bigg Boss Tamil: இந்தாண்டின் பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸ் 3-வது சீசனில் பாத்திமா பாபு, மதுமிதா, கவின், சேரன், சாக்‌ஷி அகர்வால் உட்பட 15 பேர் கலந்துக் கொண்டுள்ளனர். Bigg Boss Tamil 3 Contestants list: பிக் பாஸ் 3 தமிழ் போட்டியாளர்கள் யார், யார்? முழு ரிப்போர்ட்

10:44 (IST)24 Jun 2019

Bigg Boss 3: பிக்பாஸ் 2 போட்டியாளர்கள்

கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர். மும்தாஜ், பொன்னம்பலம், யாஷிகா, ஜனனி, தாடி பாலாஜி, டேனியல், மமதி சாரி, மஹத், ரித்விகா, சென்ராயன், அனந்த் வைத்தியநாதன், நித்யா, ஷாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா, என்.எஸ்.கே. ரம்யா, வைஷ்ணவி, ஆகியோர் தான் அந்த 16 பேரும். 

Bigg Boss Tamil 3: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 15 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கியிருக்கிறார்கள். நடிகர், நடிகைகள், பாடகர்கள், மாடலிங் துறையைச் சேர்ந்தவர்கள், இயக்குநர், செய்தி வாசிப்பாளர் என பல்வேறு துறைகளில் இருந்து இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

எலிமினேஷன் ரவுண்ட் ஆரம்பித்து, சில வாரங்கள் கழித்து வைல்ட் கார்டு எண்ட்ரியின் மூலம் மேலும் சில பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 3 contestants kamal hassan vijay tv viewers responses live updates

Next Story
Bigg Boss Tamil 3 Contestants list: பிக் பாஸ் 3 தமிழ் போட்டியாளர்கள் யார், யார்? முழு ரிப்போர்ட்Bigg Boss Contestants Full List and Profile
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com