/tamil-ie/media/media_files/uploads/2019/06/z1064.jpg)
Kamal Haasan's Bigg Boss Tamil Season 3 Telecast and Updates : பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் அறிமுக நாள் நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியாளரையும் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி பிக்பாஸ் இல்லத்திற்குள் அனுப்பி வைத்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழின் மூன்றாம் பாகம் நேற்று(ஜூன்.23) தொடங்கியது. வழக்கம் போல கமல்ஹாசனே தொகுத்து வழங்க, பிரம்மாண்டமாய் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோட் ஒளிபரப்பானது.
பிக்பாஸ் மூன்றாவது சீசனின் போட்டியாளர்கள் ஓவ்வொருவரையும், கமல்ஹாசன் அறிமுகம் செய்ய, பலத்த கரவோஷங்களுக்கு இடையே, அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
போட்டியாளர்கள் யார் என்பது குறித்த முழு விவரம் இங்கே...
Live Blog
Bigg Boss Tamil Season 3 Live Updates, Kamal Haasan, Vijay Tv, Hotstar, Bigg Boss 3 Contestants : பிக்பாஸ் தமிழ் 3 லைவ் அப்டேட்ஸ்
பிக் பாஸ் மூன்றாவது சீசனின் 15வது போட்டியாளராக ரேஷ்மா களமிறங்கி உள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் பதினைந்தாவது போட்டியாளர் ரேஷ்மா! #Reshma#BiggBossTamil#BiggBossTamil3#BiggBoss3#KamalHaasan#BBTamilContestants#TuneInNow#VijayTelevisionpic.twitter.com/u0YCfuJyFR
— Vijay Television (@vijaytelevision) 23 June 2019
பிக்பாஸ் 3வது சீசனின் 14வது போட்டியாளராக முகென் ராவ் என்பவர் களமிறங்கியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்த போட்டியாளர் முகென் ராவ்! #MugenRao#BiggBossTamil#BiggBossTamil3#BiggBoss3#KamalHaasan#BBTamilContestants#TuneInNow#VijayTelevisionpic.twitter.com/Qmb5Q6ydn0
— Vijay Television (@vijaytelevision) 23 June 2019
சூப்பர்ஸ்டார் நடித்த 'காலா' படத்தில் நடன இயக்குனராக பணியாற்றிய டான்ஸ் மாஸ்டர் சாண்டி, பிக்பாஸ் மூன்றாவது சீசனில் களமிறங்கியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் பதிமூன்றாவது போட்டியாளர் சாண்டி! #Sandy#BiggBossTamil#BiggBossTamil3#BiggBoss3#KamalHaasan#BBTamilContestants#TuneInNow#VijayTelevisionpic.twitter.com/trtYNxOyXl
— Vijay Television (@vijaytelevision) 23 June 2019
சில விளம்பரங்களில் நாம் இவரை பார்த்திருப்போம். பெயர் தர்ஷன். மாடலாக இருக்கிறார். இவர் பிக்பாஸ் மூன்றாவது சீசனின் பன்னிரெண்டாவது போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போட்டியாளர் தர்ஷன்! #Tharshan#BiggBossTamil#BiggBossTamil3#BiggBoss3#KamalHaasan#BBTamilContestants#TuneInNow#VijayTelevisionpic.twitter.com/z68NakeQDE
— Vijay Television (@vijaytelevision) 23 June 2019
பிக்பாஸ் மூன்றாம் சீசனின் பதினோறாவது போட்டியாளராக இசைக் கலைஞரும், நடிகருமான மோகன் வைத்யா களமிறங்கி இருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் பதினோறாவது போட்டியாளராக நுழையும் மோகன் வைத்யா! #MohanVaithya#BiggBossTamil#BiggBossTamil3#BiggBoss3#KamalHaasan#BBTamilContestants#TuneInNow#VijayTelevisionpic.twitter.com/2xA47DirRl
— Vijay Television (@vijaytelevision) 23 June 2019
தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை, விசில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை ஷெரின், பத்தாவது போட்டியாளராக பிக்பாஸ் மூன்றாவது சீசனில் களமிறங்கி உள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் பத்தாவது போட்டியாளர் ஷெரின்! #SherinShringar#BiggBossTamil#BiggBossTamil3#BiggBoss3#KamalHaasan#BBTamilContestants#TuneInNow#VijayTelevisionpic.twitter.com/xA1EdnE2hm
— Vijay Television (@vijaytelevision) 23 June 2019
சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராஃப் என பல திரைப்படங்களை இயக்கிய சேரன், பிக்பாஸ் மூன்றாவது சீசனின் ஒன்பதாவது போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் அடுத்த போட்டியாளர் சேரன்! #Cheran#BiggBossTamil#BiggBossTamil3#BiggBoss3#KamalHaasan#BBTamilContestants#TuneInNow#VijayTelevisionpic.twitter.com/QoNRKHUPTU
— Vijay Television (@vijaytelevision) 23 June 2019
நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா விஜயகுமார் பிக்பாஸ் மூன்றாவது சீசனின் எட்டாவது போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
எட்டாவதாக பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போட்டியாளர் வனிதா விஜய்குமார்! #VanithaVijayKumar#BiggBossTamil#BiggBossTamil3#BiggBoss3#KamalHaasan#BBTamilContestants#TuneInNow#VijayTelevisionpic.twitter.com/mcLPuQnjhZ
— Vijay Television (@vijaytelevision) 23 June 2019
80ஸ் களில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சரவணனுக்கு, கார்த்தியுடன் இணைந்து அடித்த பருத்தி வீரன் படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பிக்பாஸ் மூன்றாவது சீசனின் ஏழாவது போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் ஏழாவது போட்டியாளர் சரவணன்! #Saravanan#BiggBossTamil#BiggBossTamil3#BiggBoss3#KamalHaasan#BBTamilContestants#TuneInNow#VijayTelevisionpic.twitter.com/GAUgvZqkWJ
— Vijay Television (@vijaytelevision) 23 June 2019
அஜித் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை அபிராமி, பிக்பாஸ் 3 சீசனில், ஆறாவது போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.
ஆறாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் அபிராமி! #AbhiramiVenkatachalam#BiggBossTamil#BiggBossTamil3#BiggBoss3#KamalHaasan#BBTamilContestants#TuneInNow#VijayTelevisionpic.twitter.com/SxeKfOsPFF
— Vijay Television (@vijaytelevision) 23 June 2019
பிக் பாஸ் மூன்றாவது சீசனின் ஐந்தாவது போட்டியாளராக களமிறங்கி இருப்பது ' சரவணன் மீனாட்சி' புகழ் கவின். பொண்ணுங்களுக்கு செம ஹேப்பி தான்!
பிக்பாஸ் வீட்டிற்குள் ஐந்தாவது போட்டியாளராக வரும் கவின்! #Kavin#BiggBossTamil#BiggBossTamil3#BiggBoss3#KamalHaasan#BBTamilContestants#TuneInNow#VijayTelevisionpic.twitter.com/ihMGUrAHXY
— Vijay Television (@vijaytelevision) 23 June 2019
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் அறிமுகமாகி, 'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் அடுத்த தளத்துக்குச் சென்ற பிரபல காமெடி நடிகை மதுமிதா, பிக்பாஸ் மூன்றாவது சீசனின் நான்காவது போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் அடுத்த போட்டியாளர் மதுமிதா! #Madhumitha#BiggBossTamil#BiggBossTamil3#BiggBoss3#KamalHaasan#BBTamilContestants#TuneInNow#VijayTelevisionpic.twitter.com/2UMpFjxJCB
— Vijay Television (@vijaytelevision) 23 June 2019
காலா படத்தின் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த நடிகை சாக்ஷி அகர்வால், பிக்பாஸ் மூன்றாம் சீசனின் மூன்றாவது போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் மூன்றாவது போட்டியாளர் சாக்சி அகர்வால்! #SakshiAgarwal#BiggBossTamil#BiggBossTamil3#BiggBoss3#KamalHaasan#BBTamilContestants#TuneInNowpic.twitter.com/LcFtb1Rw53
— Vijay Television (@vijaytelevision) 23 June 2019
பிக்பாஸ் வீட்டிற்குள் பாத்திமா பாபுவை தொடர்ந்து, இரண்டாவது போட்டியாளராக இளம் மாடல் லொஸ்லியா இணைந்துள்ளார்.
இரண்டாவதாக பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போட்டியாளர் லொஸ்லியா! #Losliya#BiggBossTamil#BiggBossTamil3#BiggBoss3#KamalHaasan#BBTamilContestants#TuneInNow#VijayTelevisionpic.twitter.com/G9lsYhaQQ6
— Vijay Television (@vijaytelevision) 23 June 2019
பிக்பாஸ் 3 சீசனில், முதல் போட்டியாளராக, பிரபல நடிகையும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு இணைந்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளராக களமிறங்கும் பாத்திமா பாபு! #FathimaBabu#BiggBossTamil#BiggBossTamil3#BiggBoss3#KamalHaasan#BBTamilContestants#TuneInNow#VijayTelevisionpic.twitter.com/FHsQG7yApI
— Vijay Television (@vijaytelevision) 23 June 2019
பிக்பாஸ் சீசன் மூன்றின் போட்டியாளர்களாக இவர்கள் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ( அஜித் நடிப்பில் விரைவில் வெளிவரஉள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்), நடிகர் மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா, காமெடி நடிகை மதுமிதா, வனிதா விஜயகுமார் ( நடிகர் விஜயகுமாரின் மகள்), நடிகர் பருத்திவீரன் சரவணன், மலேசிய நடிகர் மற்றும் இசைக்கலைஞர் முஜென் ராவ், நடன இயக்குனர் சாண்டி, சரவணன் மீனாட்சி சீரியல் பிரபலம் கவின், பாடகர் மோகித் கவுர், நடிகை பாத்திமா பாபு, சாக்ஷி அகர்வால், நடிகர்கள் சேரன் மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன்.
தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இயல்பாகவே மற்ற தொலைக்காட்சிகளின் சீரியல் தயாரிப்பாளர்கள் மத்தியில் பிக்பாஸ் புளியை கரைக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights