பிக்பாஸ் மூன்றவாது சீசன் 70வது நாளை கடந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. சேரன், லோஸ்லியா, கவின், சாண்டி, தர்ஷன், முகென், வனிதா, தர்ஷன் ஆகிய எட்டு போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், வனிதா மக்களால் முன்பே வெளியேற்றப்பட்டும், மீண்டும் பிக்பாஸ் சட்டத்தின்(?) மூலம் உள்ளே கொண்டு வரப்பட்டார்.
இது ஒருபுறமிருக்க, இந்த வாரம் யாருமே வெளியேற்றப்படப் போவதில்லை என்று கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆனால், போட்டியாளர்களுக்கு அது தெரியாது. இந்நிலையில், இன்றைய புரமோஸ் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு போட்டியாளர்கள் பதில் சொல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி ஒட்டுமொத்த பார்வையாளர்களின் பிரதிநிதியாக பேசிய ஒருவர் லோஸ்லியாவிடம், "சேரன் உங்கள் மீது வைத்திருப்பது உண்மையான பாசம். நீங்களும் அவர் மேல் உண்மையான பாசம் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் சேரனின் பாசம் நாடகம் என்று கவின் சொன்னபோது உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.
அகம் டிவி அரசியல்: கமல்ஹாசன் எடுக்கும் புது பரிணாமங்கள்
இந்த கேள்விக்கு லாஸ்லியாவை விட கவின் மிகுந்த அதிர்ச்சி அடைகிறார். இதையடுத்து கேள்விக்கு பதிலளித்த லாஸ்லியா, "எனக்கு எது உண்மை, எது பொய் என்பதில் குழப்பம் உள்ளது. நான் உண்மையாக இருக்கிறேன் என்பது மட்டும் தெரியும். அதை நான் யாருக்கும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்” என்று கண்ணீருடன் திணறியபடி பதிலளித்துள்ளார்.
இவை அனைத்தும் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அதை புரமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
கவின் முகத்தில் தான் ஈயாடவில்லை!!