Advertisment

கெளதம் மேனன் ஹீரோயினை மணக்கும் பிக் பாஸ் ஆரவ்?!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர், சரண் இயக்கத்தில் 'மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்', 'ராஜ பீமா' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
bigg boss aarav to marry gautham menon heroine

பிக் பாஸ் ஆரவ்

விஜய் டிவி-யில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். விளம்பர மாடலான அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் இயக்குநர் மணிரத்னத்தின் 'ஓகே கண்மணி', விஜய் ஆண்டனியுடன் 'சைத்தான்' உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர், சரண் இயக்கத்தில் 'மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்', 'ராஜ பீமா' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

Advertisment

ராணுவத்தை பலப்படுத்துங்கள் – பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் எச்சரிக்கை!

ஆரவ்வை காதலிப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா தெரிவித்தார். ஆனால் அதற்கு அப்போது மறுப்பு தெரிவித்தார் ஆரவ். நிகழ்ச்சி முடிந்ததும், ஆரவும் ஓவியாவும் நண்பர்களாக வலம் வரத் தொடங்கினர். அதோடு அவர்கள் குறித்த சர்ச்சையும் ஓய்ந்தபாடில்லை. இதையடுத்து தனக்கு திருமணத்தில் உடன்பாடில்லை என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஓவியா.

கொரோனா ஏற்படுத்திய சோகம்: துக்கத்தில் தமன்னா

இந்நிலையில் இளம் நடிகை ராஹீ என்பவரை ஆரவ் திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் கௌதம் மேனன் இயக்கியுள்ள ஜோஷ்வா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுக்கு செப்டம்பர் 6-ம் தேதி திருமணம் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment