லாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..!

பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சமூக ஊடகங்களில் கருத்து பரவி வருகிறது. 

By: October 29, 2020, 9:58:45 PM

பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சமூக ஊடகங்களில் கருத்து பரவி வருகிறது.

இலங்கை தமிழரான லாஸ்லியா, இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் அவர் தமிழகம் முழுவதும் மட்டுமில்லாமல் உலகத் தமிழர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

இந்நிலையில்,சமூக ஊடகங்களில் பரவும் தகவல் அடிப்படையில், “லாஸ்லியாவின் பெற்றோர் கனடாவில்  இருக்கும் தங்கள் நண்பரின் மகனுக்கு லாஸ்லியாவை  கட்டிவைக்க பேசி வருவதாகவும், இதற்கு லாஸ்லியா விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், லாஸ்லியா எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இந்த செய்தி உண்மை என்றால், லாஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் லாஸ்லியாவின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கவின்- லாஸ்லியா இருவருக்கம் இடையேயான ஆழமான புரிதல் மற்றும் நட்பை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஆரவ்வை காதலிப்பதாக ஓவியா தெரிவித்தார். ஆனால், ஆரவ் அப்போது முற்றிலுமாக மறுப்பு தெரிவித்தார். நிகழ்ச்சி முடிந்ததும், ஆரவும் ஓவியாவும் நண்பர்களாக தங்களை அடையாள படுத்திக்கொண்டனர்.  அதன்பின்,  ஆரவ்விற்கும், ‘ஜோஷ்வா’ படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஹிக்கும் செப்டம்பர் 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, லாஸ்லியா 3 திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் ஜோடியாக நடிக்கிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss fame losliya marraige news losliya wedding news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X