/tamil-ie/media/media_files/uploads/2020/03/Lift-First-look-Bigg-Boss-Kavin.jpg)
Lift First look, Bigg Boss Kavin
Bigg Boss Kavin : கவின் பல ஆண்டுகளாக தொலைக்காட்சி துறையில் இருக்கிறார். ஆனால் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின்னரே பரவலாக அறியப்பட்டார். அந்நிகழ்ச்சியில், கவின் மற்றும் லாஸ்லியாவின் காதலுக்கு டி.ஆர்.பி எகிறியது. நிகழ்ச்சி முடிந்த பிறகு, இருவரும் தங்களுக்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
எல்.முருகனுக்கு எதிராக சாதி வெறியை தூண்டும் வகையில் ட்வீட்டா? எஸ்.வி.சேகர் புகார்!
Hope this #lift will lift all the souls who passionately worked for this film with a lot of dreams.. :) #Lift#FirstLookpic.twitter.com/oTx3ginqA6
— Kavin (@Kavin_m_0431) March 13, 2020
இந்நிலையில் அவர் ‘லிஃப்ட்’ என்ற படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார். ரொமான்டிக் த்ரில்லர் களத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக 'பிகில்' பட புகழ், அம்ரிதா ஐயர் ஜோடியாக நடிக்கிறார். வினீத் வராபிரசாத் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தை, ஹெப்ஸி தயாரிக்கிறார். பிரிட்டோ மைக்கேல் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு, எஸ்.யுவா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
கொரோனா பாதிப்பு: கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா? பகுத்தறிவா? – ஆ.ராசா
தற்போது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திலும் கவின் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.