SVe Shekher Twitter account hacked and posted against L.Murugan : தமிழக பாஜகவிற்கு புதிய தலைவரை 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவராக பதவி வகித்த எல். முருகனை தமிழக பாஜகவின் தலைவராக நியமித்துள்ளது.
மேலும் படிக்க : தமிழக பாஜக தலைவரான 2வது தலித்; எல்.முருகன் நியமனம் முழு பின்னணி
வலதுசாரி சித்தாந்தங்களைக் கொண்ட பாஜக, தமிழகத்திற்கு இரண்டாவது முறையாக தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக நியமித்துள்ளது.திராவிட சித்தாந்தங்கள் கொண்ட தமிழகத்தில் இவரை நிறுத்துவது திமுக மற்றும் அதிமுகவிற்கு கடுமையான சவாலை உண்டாக்கும் என்பதை அறிந்து பிஜேபி இந்த முடிவினை எடுத்துள்ளது.
இந்நிலையில் நடிகர் எஸ்வி சேகர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து எல்.முருகனுக்கு எதிராக சாதி வெறியை தூண்டும் வகையில் பல ட்வீட்கள் வெளியானது. இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் படிக்க : “நீ எம்.ஜி.ஆரா ? நீ கலைஞரா ? நீ ஒரு …..” விஷாலை மோசமாக சாடிய இயக்குநர் மிஷ்கின்!
மேலும் சாதி வெறியை தூண்டும் வகையில் யாரோ என்னுடைய கணக்கில் இருந்து பதிவுகளை வெளியிட்டுள்ளதாகவும், அவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார் எஸ்.வி.சேகர். காவல்துறையினரிடம் அளித்த புகாரின் நகலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் எஸ்.வி சேகர்.
எச்.ராஜா, ராகவன், எஸ்.வி.சேகர், பொன்னர், நயனார் நாகேந்திரன் ஆகியோரில் யாராவது ஒருவர் இந்த பொறுப்பிற்கு வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முருகனின் நியமனத்தை ஜே.பி. நட்டா வெளியாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"