Bigg Boss promo 1 : பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினம் வனிதாவின் ரீ எண்ட்ரி முதல் புரோமாவாக வெளியாகி அதிரு புதிரை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீடு வனிதாவின் பிரிவுக்கு பின்பு களை இழந்து விட்டது. வனிதாவின் துணிச்சலான பேச்சு, அடிக்கடி சண்டை தினம் ஒரு பிரச்சனை என வனிதாவிற்காகவே தினமும் பிக் பாஸை பார்த்து வந்த கூட்டம்., வனிதா சென்ற பிறகு எபிசோட்டை பார்ப்பதையே விட்டு விட்டது.
மேலும் படிக்க - Bigg Boss Tamil 3, August 12, 2019 Written Update: 'கவின் ஒர்த் இல்ல... ஃபிராடு லோஸ்லியா' - முதல் நாளே முட்டி தேய விட்ட வனிதா!
தர்ஷன், மதுமிதாவிடம் அவர் செய்த பிரச்சனைகளுக்காக பலரும் வனிதாவை சகட்டு மேனிக்கு திட்டினார்கள். அதன் அடுத்தப்படியாக பிக் பாஸ் இல்லத்தில் இருந்து 3 ஆவது வாரமே வெளியேறினார். அவர் சென்ற பிறகு மீரா அந்த இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் மீராவுடன் ஒப்பிடுகையில் வனிதா எவ்வளவோ பரவாயில்லை என்ற நிலையானது.
வனிதா இருந்திருந்தால் கவின் - சாக்ஷி- லாஸ்லியா முக்கோண காதலுக்கு எப்பவோ முற்றுப்புள்ளி வைத்திருப்பார் என்ற பேச்சுக்கள் தான் ரசிகர்கள் மத்தியில். அதிலும் மீரா- சேரன் விஷயம் நடந்த இடத்தில் வனிதா இருந்திருந்தால் என்ன நடந்து இருக்கும் என்று சற்று யோசித்தாலே தெரியும்.
கடைசியில் இப்போது 17 ஆவது போட்டியாளராக நடிகை கஸ்தூரி உள்ளே சென்றிருக்க்கிறார். இவர் இன்னும் கேம்மை விளையாட ஆட தொடங்கவில்லை. நேற்றைய எபிசோட்டில் சாக்ஷி வெளியேறினார். கவினுடன் சர்ச்சையில் சிக்கியது தான் சாக்ஷி வெளியேறியதற்கு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்றைய தினம் வனித பிக் பாஸ் வீட்டில் மீண்டும் எண்ட்ரி ஆகிறார். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் போட்டியாளர்களுக்கு தரப்பட்டுள்ளது போல. போட்டியாளர்கள் அனைவரும் ஹோட்டல் ஊழியர்கள் உடையில் உள்ளனர்.அப்போது குடும்ப குத்து விளக்காக வனிதா வருகிறார். அவருக்கு சேரன் மாலை போட்டு வரவேற்கிறார்.
ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் செம்ம உற்சாகத்துடன் இருக்கிறார்கள். வனிதா சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார். அல்லது டாஸ்கின் தலைவராக வந்திருக்கிறாரா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.