பிராது குடுக்குறேன்னு இப்படியா செய்றது? நம்மளும் குடுப்போம்ல பிராது!

Bigg Boss Tamil: கடந்த எபிசோட்களில் மீரா மிதுன், சேரன் மீது புகார் கிளப்பினார். இது ரசிகர்களின் மத்தியில் சேரன் மீது பரிதாபத்தைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss tamil promo
Bigg Boss tamil promo

Bigg Boss Promo: நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 34-வது நாளாக ஒளிப்பரப்பு செய்யப்படவிருக்கிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இப்போட்டியிலிருந்து, ஃபாத்திமா பாபு, வனிதா விஜயக்குமார், மோகன் வைத்யா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டு விட்டார்கள்.

Bigg Boss Tamil: நீங்க ஏன் அங்க போனிங்க? – சேரனுக்காக வருத்தப்படும் ரசிகர்கள்

இதற்கிடையே வார நாட்களில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்படும். வார இறுதியில் போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்திப்பார் கமல். அப்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் அந்தந்த வாரத்தில் செய்த தவறுகள் சுட்டிக்காட்டப்படும். தேவையென்றால் குறும்படமும் ஒளிபரப்பப்படும்.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில், “தீராத பிரச்னையைக் கூட தீத்து வைக்கிற இடம் கிராம சபைன்னு பேசுற ஆளு நானு. உள்ள என்ன பேசிட்டு இருக்காய்ங்கன்னு பாத்தீங்கள்ல, நாட்டாமையையே போட்டு நொறுக்கிபுட்டாய்ங்க, அவரும் நொறுங்கிட்டாரு. பிராது குடுக்குறேன்னு இப்படியா செய்றது? நம்மளும் குடுப்போம்ல பிராது” என கமல் கூறுவது இடம் பெற்றுள்ளது.

கடந்த எபிசோட்களில் மீரா மிதுன், சேரன் மீது புகார் கிளப்பினார். இது ரசிகர்களின் மத்தியில் சேரன் மீது பரிதாபத்தைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss promo kamal haasan cheran meera mithun

Next Story
Run Serial: மாதவன் பட பெயரில் சன் டி.வி-யின் புதிய சீரியல்!Run Serial Sun TV
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express