Bigg boss promo today : வனிதாவின் வருகைக்கு பின்னர் பற்றி எரியும் பிக் பாஸ் இன்றும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செல்லும் என்பது காலையிலேயே உறுதியாகிவிட்டது. இன்றைய தினத்தின் 3 ப்ரோம்ம்களும் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.
Bigg boss today promo 1: நேற்றைய தினம் பிக் பாஸ் எபிசோட்டை பார்த்தவர்கள் அனைவருக்கும் எழுந்த கேள்வி இதுதான். என்னய்யா நடக்குது இங்க? எல்லாரும் ஏன் இப்படி அடிச்சிட்டு சாவுறீங்கள் என்பது தான். ஜெயிலுக்கு யாரை அனுப்பலாம்? என விவாதத்தில் எழுந்த விஷயம் கடைசியில் பெண் அடிமை, ஆணாதீக்கம் வரை போய் முடிந்தது.
நல்ல வேளை பெரியாரையெல்லாம் இழுக்காமல் விட்டார்கள். கவின், சாண்டி, தர்ஷன், முகென் இந்த நால்வர் அணி சாரி சாரி இந்த லாஸ்லியா புள்ளைய மறந்துட்டோம் பாருங்க. இவங்க ஐந்து பேரும் எந்த தப்பு நடந்தாலும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுப்பதில்லை. அதிலும் லாஸ்லியா சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தான் சேரன் பக்கத்தில்.
மற்ற நாட்களில் அவர் பாதி நேரம் இருப்பது இவர்கள் உடன் தான். சிறப்பு விருந்தினராக உள்ளே வந்த வனிதா பற்ற வைத்த தீ பற்றி எரிந்தது. இதனால் முகென் - அபி காதல் பிரிய அடுத்து மதுமிதாவும் இறையாகி விட்டார் பாவம். அவரை பேச வைத்து விட்டு நன்கு வேடிக்கை பார்த்தார் வனிதா.
மதுமிதாவின் பேச்சால் எரிச்சல் அடைந்த ஐவர் அணி இப்போது எல்லோர் பற்றியும் கூடி கூடி பேசி வருகிறது. இதற்கிடையில் முகென் மீண்டும் அபியிடம் அழுதுக் கொண்டு ஏதே கதைக்கிறார். இந்த அப்பி பொண்ணும் வழக்கம் போல் பேசுகிறது. அப்ப உனக்காக சண்டை போட்ட எல்லாரும் லூசு போல.
Bigg boss today promo 2:
அடுத்த ப்ரோமை கவனித்தால் வனிதா தர்ஷனிடம் கேள்விகளை அடுக்கிறார். நன்கு கவனித்தால் தெரியும். வர வர தர்ஷனின் நடவடிக்கையிலும் சில மாறுதல்கள் தெரிகிறது. ஒருவேளை தன்னை பிக் பாஸ் வின்னர் என்றே தர்ஷன் முடிவு செய்து விட்டார் போல. ஆரம்பத்தில் இருந்த மரியாதை நிதானம் எதுவுமே இப்போது தர்ஷனிடம் இல்லை. இதற்கு கவின் - சாண்டி கூட காரணமாக இருக்கலாம்.
வனிதா கோடு போட, மதுமிதா ரோடே போட்டுவிட்டார்! - நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிக்பாஸ் ரணகளம்
அதே நேரம், வந்த முதல் நாளே முகெனை நடுங்க வைத்த வனிதா இப்போது டார்கெட் செய்து இருப்பது தர்ஷனையா? என்ற சந்தேகமும் எழுகிறது. காரணம், நேற்று முதல் தர்ஷன் பற்றி சேரன், மதுவிடம் வனிதா சில கருத்துக்களை பதிவு செய்து வருவதை பிக் பாஸ் ரசிகர்கள் அறிவார்கள். ஒருவேளை பழைய பகையை வனிதா மறக்கவில்லை போல என்ற எண்ணமும் எழாமல் இல்லை.
Bigg boss today promo 3 :
ஐவர் அணியின் கூத்து தான் இன்றைய மூன்றாவது ப்ரமோ. முகென் பாட, லாஸ்லியா ஆட அடடடா இந்த காட்சிகளை பார்ப்பதற்கே மது, சேரனுக்கு வெறுப்பாக இருக்கிறது போல.