பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் வழக்கம் போல கோவத்தில் கத்தும் ஐஸ்வர்யா ஆங்கிலத்தில் பேசுகிறார். இதன் வாக்குவாதத்தில் அவரை ஓவியா என்கிறார் ஜனனி. ஞாயமா?
ஓவியா மாறி பண்ண டிரை பண்றா : ஜனனி கூறுவது
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு எப்படி ஃப்ரீஸ் டாஸ்க் நடந்ததோ அது போலவே இந்த ஆண்டும் நடந்தது. அதே விஷயத்தை காப்பி செய்யும் பிக் பாஸ் 2 பிறரை காப்பாற்றும் டாஸ்க்கையும் டிப்பி காப்பி அடித்துள்ளது.
இந்த வாரம் எவிக்ட் ஆகி இருக்கும் நபர்களில் ஐஸ்வர்யாவும் இருக்கிறார். எல்லா வாரங்கள் போலவே இந்த வாரமும் அவரை காப்பாற்ற பிக் பாஸ் ஒரு திட்டம் தீட்டி, டாஸ்க் அறிமுகப்படுத்தினார்.
பிக் பாஸ் 2 : இதற்கு தானே ஆசைப்பட்டாய் நெட்டிசன்களா? ???? பெட்டியை பேக் செய்யும் ஐஸ்!
இதில், எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகி இருக்கும் நபர் மற்றவரை ஒரு விஷயம் செய்யச் சொல்ல வேண்டும். அந்த போட்டியாளர் அதை செய்தால், இவர் காப்பாற்றப்படுவார். இதில் சென்றாயனை சிவப்பு நிற சாயம் தலையில் பூச சொல்கிறார்.
அப்போது இதை செய்தால் சென்றாயன் காப்பாற்றப்படுவார் என்று பொய் கூறி அந்த விஷயத்தை செய்ய வைக்கிறார் ஐஸ்வர்யா. இந்த உண்மை சென்றாயனுக்கு மற்ற போட்டியாளர்களால் தெரிய வர, மெதுவாக சண்டை வெடிக்கிறது.
(இன்று மும்தாஜ் மற்றும் விஜயலட்சுமிக்கும் சண்டை வெடிக்கிறது)
September 2018
அந்த சண்டை யாஷிகா - ஐஸ்வர்யா இடையே முத்திப் போகிறது. இதற்காக இன்றும் இருவரும் சண்டை போடுகின்றனர்.
September 2018
இந்த சண்டையின்போது, வழக்கம் போல ஐஸ்வர்யா ஆங்கிலத்தில் பேசிகிறார். பிக் பாஸ் வீட்டின் விதிப்படி, தமிழில் ஒருவர் பேசினாலும், 5 பேல் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும். இதனால் இனியும் இப்படி செய்யாதீர்கள் என்று மற்றவர்கள் கூற வாக்குவாதம் செய்கிறார் ஐஸ்.
September 2018
அப்போது ‘அவர் ஓவியா போலவே செய்ய நினைக்கிறார்’ என்று ஜனனி ஒரு வார்த்தை கூறுகிறார். இதனால், போட்டியாளர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சி குழு மட்டுமல்ல, நெட்டிசன்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.