Bigg Boss Tamil 3 Episode 54: பிக்பாஸ் வீட்டில் 54-ம் நாளின் காலை “ஊலலா..” பாடலுடன் தொடங்கியது. சாண்டி, கவின், தர்ஷன், முகென் ஆகியோர், சேரன் தங்கள் யாருடனும் சரியாக பேசுவது இல்லை எனப் பேசிக் கொண்டிருந்தனர்.
அதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்கள் பிரிவினை குறித்து சேரனிடம் பேசிக் கொண்டிருந்தார் தர்ஷன். அப்போது மவுன விரதத்தில் இருந்த மதுமிதா அவர்களுடைய உரையாடலை கவனித்த உடன் விரதத்தை கலைத்தார். பிறகென்ன, அனைவரும் எதிர்பார்த்த பிரச்னை வெடித்தது.
Bigg Boss Tamil 3, (15.08.19) Written Update: ஆண்களா? பெண்களா? சபாஷ் சரியான போட்டி!
அந்த சண்டையில் நடந்து முடிந்த கதை, கவினின் முக்கோண காதல், வனிதாவின் தாக்கம் என பல விவகாரங்களையும் போட்டியாளர்கள் இழுத்தனர். இதில் கஸ்தூரி வழக்கம் போல கருத்து கூற முயல, அது மேலும் பிரச்னையை கூட்டியது.
இதனைத் தொடர்ந்து, கவின், சாண்டியிடம் தனியாக பேச முயன்றார் கஸ்தூரி. ஆனால் அதற்கு உடன்படாத கவின், ‘வேலைக்கே ஆகாது’ என்றவாறு சாண்டியை இழுத்துச் சென்றார். அதோடு, விருப்பம் இல்லாதவர்களை வலுகட்டாயமாக பேசச் சொல்வது அத்துமீறல் என்றார். உடனே கொதித்தெழுந்த கஸ்தூரி, 4 பெண்களுடன் பேசி பெயரை கெடுத்துக் கொண்டது தான் அத்துமீறல் என்று பதிலளித்தார்.
இதனால் உக்கிரமான கவின், கஸ்தூரியை “சாவடிச்சுடுவேன்” என்று உரக்கக் கத்தினார். ஆனால் இதை கஸ்தூரி கண்டுகொள்ளவில்லை. மறுபுறம் முடிந்த கதைகளையே பேசவே வேண்டாம் என மதுமிதாவுக்கு அறிவுரை வழங்கினார் சேரன்.
பின்னர் சமையல் கூடத்தில் வனிதாவுக்கும் கஸ்தூரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான தலைவரை தேர்வு செய்யும் போட்டி நடந்தது. இதற்காக கொடுக்கப்பட்ட டாஸ்கில் வெற்றி பெற்றார் மதுமிதா. இது சேரனுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்தது. எப்படியோ தலைவர் பதவி கிடைத்ததன் மூலம் அடுத்தவார நாமினேஷனில் இருந்து தப்பித்துவிட்டதாக மனதுக்குள் சந்தோஷப்பட்டிருப்பார் மதுமிதா.
புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதால், பிக்பாஸ் வீட்டு வேலைகளுக்காக புதிய அணியும் பிரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ’ஹலோ’ ஆப்பின் ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் அபிராமி வெற்றி பெற்றார். அவருக்கு நடுவர் வெற்றியாளர் பட்டத்தை வழங்கினார். பின்னர் சாண்டி குழுவினர் கேமரா முன் தோன்றி, “வீ ஆர் த பாய்ஸ்” பாடலை பாடி நேற்றைய நிகழ்ச்சிக்கு எண்ட் கார்டு போட்டனர்.